Published:Updated:

நிதின் கட்கரி பதவி விலகலை ஏற்க பா.ஜ. மறுப்பு!

நிதின் கட்கரி பதவி விலகலை ஏற்க பா.ஜ. மறுப்பு!
நிதின் கட்கரி பதவி விலகலை ஏற்க பா.ஜ. மறுப்பு!

புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ். கைவிட்டதால்,ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள நிதின் கட்கரி, பா.ஜனதா தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் கட்கரி பதவி விலகமாட்டார் என்று பா.ஜனதா கூறியுள்ளது.

பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி மீது 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். அதை நிதின் கட்காரி மறுத்தபோதிலும், அடுத்தடுத்து அவருக்கு எதிராக ஊழல் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.அவரது உதவியாளர்கள் கட்கரியின் பினாமிகளாக,26 கம்பெனிகளில் இயக்குனர்களாக உள்ளதும் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக  வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கட்கரி,நேற்று மும்பையிலிருந்து டெல்லி சென்றார்.அங்கு அவரது இல்லத்தில் நேற்று இரவு பா.ஜனதா உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில்,பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி,சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில்,கட்கரி,ஊழல் குற்றச்சாட்டு குறித்த தனது தரப்பு கருத்துகளை எடுத்துக்கூறினார்.தான் ஒரு நிரபராதி என்று கூறிய அவர், பா.ஜனதா தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார் என்றும் கூறியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். கைவிட்டது

ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன்தான், கடந்த 2009-ம் ஆண்டு, பா.ஜனதா தலைவர் பதவியை நிதின் கட்கரி பெற்றார்.ஆனால், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தற்போது  கட்கரியை கைவிட்டு விட்டது.

இதுகுறித்து அந்த இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,"எந்த தனிநபரோ, இயக்கமோ சட்டவிரோத காரியத்தில் ஈடுபட்டால்,பாரபட்சமற்ற விசாரணைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.அதில் குற்றவாளி என கண்டறியப்பட்டால், தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

##~~##
ராஜினாமா
ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் கைவிட்டதால், கட்கரி அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும்,விசாரணைக்கு தயார் என்று  கட்கரி கூறியதற்கு கட்சியில் வரவேற்பு இருந்தபோதிலும்,அவரது நிறுவனங்கள் குறித்து ஏராளமான கேள்விகள் எழும்பி வருவதால், கட்சியில் கட்கரிக்கு எதிராக முணுமுணுப்பு உருவாகி வருகிறது.

பா.ஜ. ஏறக மறுப்பு

இதனால்தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், அதற்கு பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் முட்டுக்கட்டை போட்டு வருவதாக தெரிகிறது. அடுத்த மாதம் குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நேரத்தில் கட்சி தலைவராக இருப்பவர் பதவி விலகினால், அது தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். எனவே, தேர்தல் முடிந்த பிறகு பதவி விலகுங்கள் என்று அவருக்கு யோசனை கூறி இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், கட்கரி பதவி விலகுவதை கட்சி விரும்பவில்லை என்றும், அவர் தொடர்ந்து பா.ஜ. தலைவர் பதவியில் நீடிப்பார் என்றும் கூறினார்.

மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இமாச்சல் பிரதேசத்தில் அவர் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.