Published:Updated:

மேலும் 2 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஜெ.வுடன் சந்திப்பு!

விகடன் விமர்சனக்குழு
மேலும் 2 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஜெ.வுடன் சந்திப்பு!
மேலும் 2 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஜெ.வுடன் சந்திப்பு!
மேலும் 2 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஜெ.வுடன் சந்திப்பு!

சென்னை: தேமுதிக கட்சியை சேர்ந்த மைக்கேல் ராயப்பன் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர்  ஜெயலலிதாவை இன்று சந்தித்ததால் தமிழக அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பு நிலவுகிறது.

முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன் மற்றும்  தமிழ்  அழகன் ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் நேரில்   சந்தித்தனர்.அப்போது,அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,தங்களது தொகுதிக்கான  நலத்திட்டங்களுக்கான கோரிக்கை விடுப்பதற்காகவே முதல்வரை சந்தித்ததாக  தெரிவித்தனர்.

##~~##
இருப்பினும் அவர்கள் அதிமுகவில் ஐக்கியமாக முடிவு செய்துவிட்டதாகவும், கட்சித்  தாவல் தடைச்சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. பதவி பறிபோகாமல்  இருப்பதற்காக,விஜயகாந்தே தங்களை கட்சியை விட்டு நீக்கட்டும் என்ற  நோக்கத்துடனேயே அவர்கள் ஜெயலலிதாவை பகிரங்கமாக சந்தித்ததாகவே கருதப்பட்டது.
இதனிடையே இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது குறித்து அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக  அவர் நேற்று இது குறித்து தமது கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை  நடத்தினார்.
இந்நிலையில் இன்று தேமுதிகவை சேர்ந்த மைக்கேல் ராயப்பன் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய மேலும் 2 எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ஜெயலலிதாவை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இவர்களும், தொகுதி பிரச்னைக்காகவே முதல்வரை சந்தித்ததாக தெரிவித்தனர்;

கருத்து சொல்ல விஜயகாந்த் மறுப்பு

இதனிடையே இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திடம், அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து கேட்டபோது, கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.