Published:Updated:

மேலும் 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா

மேலும் 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா
மேலும் 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா
மேலும் 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா

புதுடெல்லி: எஸ்.எம். கிருஷ்ணாவை தொடர்ந்து அம்பிகா சோனி, சுபோத்காந்த் சகாய் மற்றும் முகுல் வஸ்னிக் ஆகிய மேலும் 3 மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

மத்திய அமைச்சரவை வருகிற 28 ம் தேதியன்று காலை மாற்றியமைக்கப்பட உள்ளது.  இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.    கிருஷ்ணா உள்ளிட்ட சிலர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு,அவர்கள் கட்சிப்    பணிக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற   உள்ளதால்,அங்கு தேர்தலை சந்திக்க கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த   தலைவர் என்ற முறையில் கிருஷ்ணாவை கட்சி பணிக்கு பயன்படுத்திக்கொள்ள சோனியா  விரும்பியதாகவும்,இதனைத் தொடர்ந்தே கிருஷ்ணா தமது அமைச்சர் பதவியை நேற்று  ராஜினாமா செய்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில்,கிருஷ்ணாவை தொடர்ந்து அமைச்சர்களாக இருக்கும் மேலும் சில மூத்த  காங்கிரஸ் தலைவர்கள் சிலரை கட்சி பணிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட  நிலையில், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் முகுல் வஸ்னிக் ஆகிய மேலும்  3 மத்திய கேபினட் அமைச்சர்களும் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.