Published:Updated:

அழைப்பு வந்தவுடன் அதிமுகவில் சேருவேன்: நடிகர் எஸ்.வி.சேகர்

விகடன் விமர்சனக்குழு
அழைப்பு வந்தவுடன் அதிமுகவில் சேருவேன்: நடிகர் எஸ்.வி.சேகர்
அழைப்பு வந்தவுடன் அதிமுகவில் சேருவேன்: நடிகர் எஸ்.வி.சேகர்
அழைப்பு வந்தவுடன் அதிமுகவில் சேருவேன்: நடிகர் எஸ்.வி.சேகர்

திருவெண்காடு:முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து அழைப்பு வந்தவுடன் அதிமுகவில்  சேர இருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடிகர் எஸ்.வி.  சேகர் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"மத்தியில்  காங்கிரஸ் கட்சி விரைவில் கவிழும் நிலையில் உள்ளது.கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி  தேவைக்கு ஏற்ப இல்லாததால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

##~~##
தற்போது தமிழக முதலமைச்சர் மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கைகளை எடுத்து  வருகிறார்.ஜெயலலிதா ஜாதி- மதம் இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறார்.தாழ்த்தப்பட்ட  இனத்தை சேர்ந்த ஒருவருக்கு சபாநாயகர் பதவி அளித்துள்ளார்.
நான் அதிமுகவில் இணைவதற்கு முதலமைச்சருக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பி உள்ளேன்.  முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் அதிமுகவில் சேருவேன்” என்றார்.