Published:Updated:

ஆனந்த் சர்மா வெளியுறவுத் துறை அமைச்சர்? கமல்நாத் இலாகாவும் மாறுகிறது

விகடன் விமர்சனக்குழு
ஆனந்த் சர்மா வெளியுறவுத் துறை அமைச்சர்? கமல்நாத் இலாகாவும் மாறுகிறது
ஆனந்த் சர்மா வெளியுறவுத் துறை அமைச்சர்? கமல்நாத் இலாகாவும் மாறுகிறது
ஆனந்த் சர்மா வெளியுறவுத் துறை அமைச்சர்? கமல்நாத் இலாகாவும் மாறுகிறது

புதுடெல்லி:மத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில்,ஆனந்த் சர்மா வெளியுறவுத் துறை அமைச்சராகவும்,கமல்நாத் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரகாவும் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரைத் தொடர்ந்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் முகுல் வஸ்னிக் ஆகிய மேலும் 3 மத்திய கேபினட் அமைச்சர்களும் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இவர்கள் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர். 

##~~##
இளைய தலைவர்களுக்கு வழிவிட்டும்,கட்சிப் பணிகளை கவனிப்பதற்காகவும் இவர்கள் மத்திய அமைச்சர் பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளைய அமைச்சரவை மாற்றத்தின்போது,தற்போதைய நகர்ப்புற துறை வளர்ச்சி துறை அமைச்சரான கமல்நாத்,நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும்,  வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரான ஆனந்த் சர்மா,வெளியுறவுத் துறை அமைச்சராகவும், அவருக்குப் பதிலாகஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி. புரன்டேஸ்வரி வர்த்தக துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனந்த் சர்மா வெளியுறவுத் துறை அமைச்சர்? கமல்நாத் இலாகாவும் மாறுகிறது
மேலும் தற்போது ரயில்வே இலாகாவை கவனித்து வரும் சி.பி. ஜோஷி தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பார் என்றும், அஜய் மாக்கான் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேப்போன்று இணையமைச்சராக இருக்கும் கே.ஆர். முனியப்பா கேபினட் அமைச்சராக உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த நடிகர் சிரஞ்சீவி,மேற்குவங்க மாநில எம்.பி. ஏ.எச். கான் சவுத்ரி ஆகியோரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ள புதுமுகங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.