அண்மையில் நடந்த சட்டசபைத் தேர்தலில், தமிழ்நாட்டின் வாக்குப் பதிவு சதவிகிதம் பெரும் வியப்பு அலைகளை எழுப்பியது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு 78 சதவிகிதத்தை எட்டிப் பிடித்தது தமிழக வாக்காளர்களின் முத்திரைப் பதிவு.

கணிசமான வாக்குப் பதிவுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும்... மறுக்க முடியாத ஒரு காரணம் - இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு! 'அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி நடக்கிறது' என்று அப்போதைய ஆளும் கட்சியின் தலைவரே சீறும் அளவுக்கு நடுநிலையாகவும் துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் செயல்பட்டார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். அதற்கு முந்தைய சில பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அரங்கேறிய அராஜகக் கூத்துகளால் மனம் வெறுத்து, ஜனநாயகத்தின் மீதே விரக்திகொண்டு ஒதுங்கிய வாக்காளர்களையும் துடிப்போடு வாக்குச்சாவடிகளுக்கு வரவழைத்த சாதனை அது!

இன்று ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மக்களுக்கு அடுத்தபடியாக நன்றி சொல்ல வேண்டியது இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குத்தான். அந்த நன்றி உணர்வு, மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படப் போகும் உள்ளாட்சித் தேர்தல் களத்திலும் எதிரொலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் தமிழக வாக்காளர்கள். மாநில அரசால் நியமிக்கப்பட்ட, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட தேர்தல் ஆணையர்... அந்த மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட காவல் துறை மற்றும் அரசாங்க ஊழியர்களின் உதவியோடு நடத்துவதே உள்ளாட்சித் தேர்தல். இப்படிப்பட்ட களத்தில், தன்னுடைய நேர்மையையும் நடுநிலையையும் நிரூபித்துக் காட்டுவதற்கான கூடுதல் பொறுப்பு ஆளும் கட்சிக்கு இருக்கிறது. அத்துமீறிய கட்டளைகள் ஒருவேளை பிறந்தாலும், அதற்கு அடிபணியாமல் நெருப்பின் தூய்மையோடு செயல்பட வேண்டிய பொறுப்பு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் இருக்கிறது.

மாறாக, அரசின் கைப்பாவையாக மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று எண்ணவைக்கும் சம்பவங்கள் அரங்கேறினால்..?

சட்டசபைத் தேர்தலில் தனக்குப் பெருவாரியாக வாக்களித்த மக்கள், இப்போதும் தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஆளும் கட்சி இழந்துவிட்டது என்றே பொருள் ஆகிவிடும்!