Published:Updated:

ஜெ.வை சந்திக்க விஜயகாந்த் திடீர் முடிவு!

ஜெ.வை சந்திக்க விஜயகாந்த் திடீர் முடிவு!
ஜெ.வை சந்திக்க விஜயகாந்த் திடீர் முடிவு!
ஜெ.வை சந்திக்க விஜயகாந்த் திடீர் முடிவு!

சென்னை: தொகுதி பிரச்னை பற்றி பேச வேண்டும் எனக் கோரி முதல்வர்  ஜெயலலிதாவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கு தருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த்  சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக சட்டசபை கொறடா சந்திரகுமார்," தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக கட்சித் தலைவருமான விஜயகாந்த் மற்றும் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சாந்தி ராஜமாணிக்கம் (சேந்தமங்கலம்), செந்தில்குமார் (திருவெறும்பூர்), அனகை முருகேசன் (செங்கல்பட்டு), பால அருட்செல்வம் (மயிலாடுதுறை) ஆகியோர் சந்திக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.
தொகுதி பிரச்சினை குறித்து முதல்மைச்சரிடம் பேசி,மனு கொடுக்க அவர்கள் அனுமதி கேட்டுள்ளனர்.இதற்காக சட்டசபை சபாநாயகரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம்.
முதலமைச்சர் நேரம் ஒதுக்கி தருவார் என்று நம்புகிறோம்.தொகுதி பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க இருப்பதால் சபாநாயகர் அனுமதி பெற்று தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.
எங்கள் மனுவை சபாநாயகர் பெற்றுக் கொண்டார்.இதில் முதல்வர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்பதால் முதல்வர் பார்வைக்கு அனுப்பி வைப்பதாக அவர் கூறினார்.எனவே நல்ல பதில் தருவார்கள் என்று காத்திருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து ஏற்கனவே உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்துள்ளார்களே? என்று கேட்டபோது,"
அது பற்றி பேச நான் தயாராக இல்லை.அது முடிந்து போன விஷயம்” என்றார்.
ஜெயலலிதாவை சந்தித்த 4 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் உங்கள் கட்சியில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே? என்ற கேள்விக்கு,"ஒரு இடத்தில் குடியிருக்கிறோம். அந்த வீடு பிடிக்கவில்லை என்றால், அங்கு உரிமையாளருக்கு உள்ள பொருட்களை ஒப்படைத்து விட்டுத்தான் செல்லவேண்டும்.இதுதான் அவர்களுக்கு பதில்” என்றார்.

முன்னதாக  தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக ஜெயலலிதாவை சந்தித்து  வருவதினால் அதிர்ச்சி அடைந்த விஜயகாந்த்,இது ஜெயலலிதா நடத்தும் நாடகம்  என்றும், இதற்கு விரைவில் முடிவு கட்டுவேன் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேருடன் ஜெயலலிதாவை சந்திக்க நேரம்  ஒதுக்கக் கோரி இன்று விஜயகாந்த் சபாநாயகரிடம் மனு  கொடுத்திருப்பது,ஜெயலலிதாவுக்கு வைக்கப்பட்ட 'செக்’காவே கருதப்படுகிறது.

விஜயகாந்தை சந்திக்க ஜெயலலிதா அத்தனை சுலபத்தில் ஒப்புக்கொள்ளமாட்டார்.அப்படி  இருக்கையில் அவரை சந்திக்க அனுமதி மறுத்து,அவரது கட்சியை சார்ந்த கட்சி தாவ  நினைக்கும் மற்ற எம்.எல்.ஏ.க்களை சந்தித்தால்,அதனை வைத்து தமது கட்சியை உடைக்க  ஜெயலலிதா திட்டமிடுவதாக பொதுமக்களிடம் பிரச்னையை கொண்டு செல்லலாம் என  விஜயகாந்த் கருதுவதாக கூறப்படுகிறது.