Published:Updated:

"நான் ஒரு பெரியாரிஸ்ட் !”

குபீர் குஷ்பூம.கா.செந்தில்குமார், ஆ.விஜயானந்த்

காங்கிரஸ் களேபரங்கள், குடும்பம், நடிகர் சங்க விவகாரம், மீண்டும் சின்னத்திரை என்ட்ரி... என குஷ்புவிடம் பேச அவ்வளவு விஷயங்கள். 'சிம்ப்ளி குஷ்பு’ நிகழ்ச்சிக்காகத் தயாராகிக்கொண்டிருந்தவர்... ''ஷூட் ஸ்ட்ரைட். எதுவா இருந்தாலும் கேளுங்க...'' என்கிறார். 

''அரசியல்ல உங்களுக்கு இப்பத்தான் ஒரு நல்ல இடம் கிடைச்சிருக்குனு நினைக்கிறீங்களா?''

''எந்த இடத்தையும் எதிர்பார்த்து நான் அரசியலுக்கு வரலை. பதவி ஆசையும் எனக்குக் கிடையாது. காங்கிரஸ்ல தேசிய செய்தித் தொடர்பாளர் பதவிக்கு என் பெயரை அறிவிச்சப்போ, நான் சிங்கப்பூர்ல இருந்தேன். கொடுத்த பதவியை வெச்சுக்கிட்டு மேக்ஸிமம் என்ன பண்ண முடியுமோ, அதைப் பண்ணுவேன். நான் புத்திசாலித்தனமா செயல்படுவேன்னு நினைச்சுத்தான், சோனியா காந்தி மேம் இப்படி ஒரு போஸ்ட் எனக்குக் கொடுத்திருக்காங்க. எனக்கு ஆச்சர்யம் என்னன்னா அவங்க என்கிட்ட, 'நீங்க டி.வி-யில பேசுறதைப் பார்த்தேன். போல்டா பேசறீங்க’னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்களே நம்மளைக் கவனிக்கிறாங்கன்னா, நாம இன்னும் இந்த சொஸைட்டியை உத்துக் கவனிக்கணும்னு தோணுச்சு!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அரசியல்ல உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச தலைவர் யார்?''

''இந்திரா காந்தி. அவங்க துணிச்சல் ரொம்பப் பிடிக்கும். அப்புறம் பெருந்தலைவர் காமராஜர். இன்னைக்கு நான் காங்கிரஸ்ல இருக்கிறதால சொல்லலை. காமராஜர் எனக்கு எப்பவுமே பிடித்த தலைவர்!''

"நான் ஒரு பெரியாரிஸ்ட் !”

'' 'குஷ்புவை, இந்திரா காந்தி உருவத்தில் பார்க்கிறேன்’னு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொன்னதை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?''

''அவர் எந்த இடத்தில் அப்படிச் சொன்னார்... எந்தப் பேட்டியில் அப்படிச் சொன்னார்னு யாராவது நிரூபிக்கட்டும். 'குஷ்புவை, இந்திரா காந்தி உருவத்தில் பார்க்கிறேன்’னு அவர் சொன்னதைக் காட்டட்டும்... நான் அரசியலை விட்டே வெளியே வந்துடுறேன்!''

''மோடி-ஜெயலலிதா சந்திப்பு பத்தி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சிச்சதை ஒரு பெண்ணாக எப்படிப் பார்க்கிறீங்க?''

''இந்த விஷயத்தைப் பத்தி நிறையவே பேசியாச்சு. இதுக்கு மேல அதைப் பத்தி பேச வேண்டாமே!''

''தி.மு.க தலைவர் கருணாநிதி மேல இன்னும் அபிமானம் வெச்சிருக்கீங்களா?''

''அரசியல்ல நுழைஞ்சதும் கலைஞரிடம்தான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். என் மனசுல அவரை மிகப் பெரிய ஸ்தானத்துல வெச்சிருக்கேன்!''

''முன்னாடி 'அரசியல்ல பிடித்த பெர்சனாலிட்டி ஜெயலலிதா’னு சொல்வீங்க. இப்போ முதலமைச்சரா அவங்க ஆட்சி பத்தி உங்க கருத்து என்ன?''

''அவங்ககிட்ட பிடிச்ச விஷயம், பிடிக்காத விஷயம் பத்தி இன்னொரு சந்தர்ப்பத்துல பேசலாமே... இப்ப வேணாம்!''

"நான் ஒரு பெரியாரிஸ்ட் !”

''உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைனு சொல்வீங்க. ஆனா, வீடு முழுக்க விதவிதமா விநாயகர் சிலைகள் வெச்சிருக்கீங்களே!''

''மும்பையில்தானே நான் பிறந்து வளர்ந்தேன். அங்கே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ரொம்ப விசேஷமா இருக்கும். அந்தச் சூழல்ல இருந்ததாலோ என்னவோ, எனக்கும் விநாயகர் மேல ஒரு பிரியம். அவ்வளவுதான். மத்தபடி  நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் சாமி கும்பிட்டது இல்லை. அப்பவும் இப்பவும் நான் ஒரு பெரியாரிஸ்ட்தான்!''

''உங்க குழந்தைகளுக்கு குஷ்புவை அரசியல்வாதியா பிடிக்குமா... நடிகையா பிடிக்குமா?''

''என் குழந்தைகளுக்கு என்னை நடிகையா தெரியாது. இப்பத்தான் ஏதோ கொஞ்சம் நடிச்சுட்டிருக்கேன்னு நினைக்கிறாங்க. அவங்களைப் பொறுத்தவரை வீட்ல அப்பாதான் பெரிய ஸ்டார். நான் நடிச்சதுல 'முறைமாமன்’ படம் மட்டும் பார்த்திருக்காங்க. அதுவும் அவங்க அப்பா டைரக்ட் பண்ண படம்னு பார்த்தாங்க. ரெண்டு பேரும் துல்கர் ஃபேன் கிளப் வெச்சிருக்காங்க. அப்புறம் மாதவன், தனுஷ், சிவகார்த்திகேயன் பிடிக்கும். ஹீரோயின்கள்ல ஸ்ருதி ஹாசன் பிடிக்கும்; ஹன்சிகாவை தங்களோட ஃப்ரெண்டா பார்ப்பாங்க. அவங்க எல்லாம் சேர்ந்து  வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சு, அதுல செம டைம்பாஸ் பண்றாங்க!''