Published:Updated:

ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டப்போகிறார்களா?

ஓ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியதையும், எடப்பாடி அரசு மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் ஆதரித்து வாக்களித்ததையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டப்போகிறார்களா?

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியதையும், எடப்பாடி அரசு மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் ஆதரித்து வாக்களித்ததையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

Published:Updated:
ஓ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ்

‘துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்?’ என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில், அந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்படவும் வாய்ப்பிருப்பதாக சிலர் அதிர்ச்சிக் கொடுக்கின்றனர்.

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியதையும், எடப்பாடி அரசு மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் ஆதரித்து வாக்களித்ததையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை. சில மாதங்களிலேயே ஓ.பி.எஸ் அணியும் எடப்பாடி அணியும் இணைந்துவிட்டன. இந்த நிலையில், ‘கொறடா உத்தரவை மீறி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று தி.மு.க-வும், டி.டி.வி.தினகரன் தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில், ‘சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது’ என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், ‘இந்த விவகாரத்தில் சபாநாயகரே முடிவெடுக்க லாம்’ என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ‘சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்?’ என்று எல்லோரும் காத்திருக்கும் வேளையில், தற்போது தி.மு.க-வில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராகப் பொறுப்புவகிக்கும் தங்க தமிழ்ச்செல்வன் பிப்ரவரி 26-ம் தேதி, சட்டமன்றச் செயலாளரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்து பரபரப்பைக் கிளப்பியிருக் கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ‘‘எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லி, முதலமைச்சரை மாற்ற வேண்டும் என கோரிக்கைவைத்ததற்காக நான் உட்பட 18 எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரால் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டோம். ஆனால், கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்த ஓ.பி.எஸ் உட்பட 11 பேர் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் தொடர்கிறது. சட்டமன்றம் முடிய இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அவர்கள் 11 பேரையும் உடனே தகுதிநீக்கம் செய்ய வேண்டும். அவர்களை அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் அனுமதிக்கவே கூடாது என்றும் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளோம். 15 நாள்களுக்குள் சபாநாயகர் நீதியை நிலைநாட்டுவார் என்று நம்புகிறோம்’’ என்றார்.

‘‘எடப்பாடியின் தலைமையை, கட்சியில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதற்குப் பிறகும் துணை முதலமைச்சர் பதவியில் ஓ.பி.எஸ் தொடர்வது தேவையற்றது. சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கைமூலம், அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டிவிடலாம்; சசிகலா சிறையிலிருந்து வரும்போது அவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கலாம் என்று சில அமைச்சர் கள் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிவருகின்றனர்’’ என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேட்டதற்கு, ‘‘சபாநாயகர் எங்களிடம் கேள்வி கேட்டால் விளக்கம் அளிப்போம். இதற்குமேல் சொல்ல விரும்ப வில்லை’’ என்றார்.