Published:Updated:

பத்திரிகையாளரை தாக்கிய வழக்கு:தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது!

விகடன் விமர்சனக்குழு
பத்திரிகையாளரை தாக்கிய வழக்கு:தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது!
பத்திரிகையாளரை தாக்கிய வழக்கு:தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது!
பத்திரிகையாளரை தாக்கிய வழக்கு:தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்துடன் சேர்ந்து பத்திரிகையாளரை  தாக்கிய வழக்கில் தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்தவாரம் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஜெயலலிதாவை சந்தித்த  நிலையில்,மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த தேமுதிக   தலைவர் விஜயகாந்திடம், இது குறித்து கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக ஜெயா தொலைக்காட்சி நிருபரும்,மூத்த பத்திரிகையாளருமான பாலு ,  "உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக முதலமைச்சரை சந்தித்து...” என்று  கேள்வியை முடிக்கும் முன்பே,விஜயகாந்த் அவரை தரக்குறைவாக திட்டியதோடு,  ஆவேசமாக பாலுவின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டார்.

உடனே  அருகில் இருந்த தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன், கையை  ஒங்கிக்கொண்டு வந்து பத்திரிகையாளர் பாலுவை தாக்கி, கீழே தள்ளிவிட்டார்.

##~~##
இந்த சம்பவம் தொடர்பாக,தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர் பாலு,மீனம்பாக்கம்  காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்  பதிவு செய்யப்பட்டது.
மேலும் விஜயகாந்துடன் சேர்ந்து பத்திரிகையாளரை தள்ளிய தேமுதிக எம்.எல்.ஏ.  அனகை முருகேசன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்,அவர் இன்று கைது  செய்யப்பட்டார்.