Published:Updated:

டெசோ தீர்மானம்: ஐ.நா. சபையில் கொடுக்க மு.க.ஸ்டாலின் யு.எஸ். சென்றார்!

விகடன் விமர்சனக்குழு
டெசோ தீர்மானம்: ஐ.நா. சபையில் கொடுக்க மு.க.ஸ்டாலின் யு.எஸ். சென்றார்!
டெசோ தீர்மானம்: ஐ.நா. சபையில் கொடுக்க மு.க.ஸ்டாலின் யு.எஸ். சென்றார்!
டெசோ தீர்மானம்: ஐ.நா. சபையில் கொடுக்க மு.க.ஸ்டாலின் யு.எஸ். சென்றார்!

சென்னை: டெசோ மாநாட்டு தீர்மானத்தை ஐ.நா. சபையில் கொடுப்பதற்காக திமுக  பொருளாளர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி  தலைமையில் டெசோ மாநாடு நடைபெற்றது.இதில் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட  தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்தும், அவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு  செல்ல வழிவகை ஏற்படுத்த வேண்டும் மற்றும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள்  உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை ஐ.நா. சபையில் அளிக்க விரிவான மனுவும் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தீர்மானங்களை ஐ.நா. சபையில் அளிக்க மு.க.ஸ்டாலினும்,  டி.ஆர். பாலுவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச்  சென்றுள்ளனர்.

##~~##
புறப்படும் முன்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,"
டெசோ மாநாட்டு தீர்மானங்களை நானும் டி.ஆர்.பாலுவும் நியூயார்க் ஐ.நா.மன்றத்தில்  1-ம் தேதி கொடுக்கிறோம். 3-ம் தேதி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக்  கழகத்திடமும் இதேபோல் மனு கொடுக்கிறோம்.
பின்னர் லண்டனில் இலங்கை தமிழர்களை ஆதரித்து பிரிட்டன் தமிழர் பேரவை சார்பில்  6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் திமுக சார்பில்  கலந்து கொள்கிறோம்”என்றார்.