Published:Updated:

மீண்டும் கைதான பொன்முடி விடுதலை!

மீண்டும் கைதான பொன்முடி விடுதலை!
மீண்டும் கைதான பொன்முடி விடுதலை!
மீண்டும் கைதான பொன்முடி விடுதலை!

திருச்சி: ஜாமீனில் வந்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு விழுப்புரம் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட  நிலையில், இன்று மாலை விடுவிக்கப்பட்டார்,.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக செம்மண் குவாரியில்,செம்மண் தோண்டியதாக  தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த  பொன்முடிக்கு,அவ்வழக்கில் நேற்று மாலை ஜாமீன் கிடைத்தது.

இதனையடுத்து அவர் இன்று திருச்சி சிறையிலிருந்து வெளியில் வரும்போது,அங்கு  தயாராக காத்து நின்ற போலீசார், அவரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த  வழக்கில் அவர் மீது, விழுப்புரம் நீதிமன்றத்தில் வாரண்ட் நிலுவையில் உள்ளதாக கூறி  பொன்முடியை விழுப்புரம் அழைத்துச் சென்றனர்.

##~~##
அப்போது திமுகவினர் மற்றும் பொன்முடி வழக்கறிஞர்கள் போலீசாருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் விழுப்புரம் கொண்டு செல்லப்பட்ட பொன்முடி, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு எதிராக வாரண்ட் எதுவும் நிலுவையில் இல்லை என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். ‘

இதனையடுத்து பொன்முடி இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.