Published:Updated:

கிராம சுகாதார செவிலியர்களுக்கு விலையில்லாமல் மடிக் கணினி!

கிராம சுகாதார செவிலியர்களுக்கு விலையில்லாமல் மடிக் கணினி!
கிராம சுகாதார செவிலியர்களுக்கு விலையில்லாமல் மடிக் கணினி!
கிராம சுகாதார செவிலியர்களுக்கு விலையில்லாமல் மடிக் கணினி!

சென்னை: கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் கால விரயத்தினை குறைக்கும்  வகையில் அவர்களுக்கு விலையில்லாமல் மடிக் கணினி வழங்கப்படும் என்று  முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக சட்டசபையில் அவர் இன்று அறிக்கை தாக்கல் செய்து  பேசுகையில்,"மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் முக்கியமான  திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கினை வகிப்பவர்கள் கிராம  சுகாதார செவிலியர்கள்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள்,  குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் ஆகியோர் பற்றிய விவரங்களை
கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக அருகிலுள்ள வலை தள  மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம்  ஏற்படுகிறது.

எனவே,கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் கால விரயத்தினை குறைக்கும்  வகையிலும்;அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும்; அவர்களுக்கு  விலையில்லாமல் மடிக் கணினி வழங்கப்படும்.இதற்கென,21 கோடியே 11 லட்சம்  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மருத்துவமனைகளில் புதிய பணியாளர்கள்

##~~##
அரசு மருத்துவமனைகள்,மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்ட  மருத்துவமனைகள்,மருத்துவ அலுவலகங்கள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள்  ஆகியவற்றில் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தல்; சுகாதாரத்தை பேணுதல்;  மருத்துவமனை வளாகத்தை பராமரித்தல்; பாதுகாத்தல்;போன்ற பணிகளை மேற்கொள்ள  ஏதுவாக,பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் என்ற பெயரில் பணியாளர்களை  கீழ்க்காணும் முறையில் நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
1. 200 படுக்கைகளுக்கு குறைவான மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள்  மற்றும் துப்புறவு பணியாளர்கள்; மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நிர்ணயிக்கும்  தொகுப்பூதிய அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 5 ஆண்டு
நீட்டிப்புக்கு வழிவகை செய்யும் வகையில்; ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம்  செய்யப்படுவார்கள்.இந்த வகையில் சுமார் 4,000 பேர் பணி நியமனம் செய்யப்படுவர்.
2. 200 படுக்கைகளுக்கு மேற்பட்ட மருத்துவமனைகளில் காலியாகவுள்ள  மருத்துவமனைப் பணியாளர் மற்றும் துப்புறவுப் பணியாளர் பணியிடங்கள் புற ஆதார  முறையில் நிரப்பப்படும்.
3. காலியாகவுள்ள செவிலியர் உதவியாளர் - நிலை2 பணியிடங்கள்,மருத்துவமனைப்  பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தல் மூலம் நிரப்பப்படும்.
இதே போன்று,மருத்துவமனைகளின் பாதுகாப்பினை செம்மைப்படுத்தும் வகையில்,  2,176 காவல் பணியாளர்கள் கீழ்க்காணும் முறையில் நியமனம் செய்யப்படுவார்கள்  என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
1) பெரிய மருத்துவமனைகளின் பாதுகாப்பினை நாள் முழுவதும் மேற்கொள்ளும்  வகையில்,8 மணி நேர பணி சுழற்சி அடிப்படையில்; புற ஆதார முறையில், அதாவது  டிரவளடிரசஉiபே முறையில்;நுழைவாயில்களுக்கு தேவையான 776 காவல்  பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
2) 200 படுக்கைகளுக்கு மேற்பட்ட மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு,  ;அவசரப் பிரிவு,மகப்பேறு பிரிவு,பச்சிளங்குழந்தை பராமரிப்பு என்று சுமார் 1400 காவல்  பணியாளர்கள் புற ஆதார முறையில்,நியமிக்கப்படுவர்.இப்பணியாளர் நியமனத்திற்கென
கூடுதல் செலவினமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
இது மட்டுமல்லாமல்,மருத்துவமனை கட்டடங்களை பராமரிக்கும் வகையில்,அதாவது  கழிவு நீர் அகற்றல்;கழிப்பிட வசதி;குடிநீர் வசதி ஆகியவற்றை மேம்படுத்துதல்; மின்  அமைப்புகளை புதுப்பித்தல் போன்ற பணிகளை 15 கோடி ரூபாய் செலவில்  மேற்கொள்ளவும்;மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள உடைந்த மரச்  சாமான்களுக்குப் பதிலாக 10 கோடி ரூபாய் செலவில் புதிய மரச் சாமான்கள் வாங்கவும்;  மருத்துவமனைகளில் தொய்வின்றி சேவை மேற்கொள்ளும் பொருட்டு தேவையான  உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க கூடுதலாக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்யவும் எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்,மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்குவதற்கும்;உயிர் காக்கும் உயர் ரக  மருந்துகள் வாங்குவதற்கும்;ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட 284 கோடி ரூபாய் இல்லாமல்,  உயிர் காக்கும் சிறப்பு மருந்துகள் வாங்க கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதியினை நான்  ஒதுக்கியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தரமான மருத்துவச் சேவையை தமிழக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற  எண்ணத்தின் அடிப்படையில், "முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்  திட்டம்"11.1.2012 அன்று என்னால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மருந்துகள்,எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை  சிகிச்சை,காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை,ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை  ஆகிய சிகிச்சைகளை மேற்கொள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக செலவு
ஆகிறது என்பதால் இந்த கூடுதல் செலவினத்தை, ஏழை எளிய நோயாளிகளே ஏற்கும்  நிலைமை உள்ளது என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இத்தகைய ஏழை,எளிய நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு,  அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக ஏற்படும் கூடுதல்  செலவினத்தையும் அரசே ஏற்கும் வகையில் ஒரு சிறப்பு தொகுப்பு நிதி,உருவாக்கப்படும்.இந்த சிறப்பு தொகுப்பு நிதிக்கு முதற்கட்டமாக 10 கோடி ரூபாய்  நிதி வழங்கப்படும் என்பதையும்; இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில்  கிடைக்கும் காப்பீட்டு தொகையிலிருந்து இந்த சிறப்பு தொகுப்பு நிதிக்காக  ஆண்டொன்றிற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.