Election bannerElection banner
Published:Updated:

“ ‘122 எம்.எல்.ஏ-க்கள் ஜெயிப்போம்’னு சொன்னேன் ...சிரிச்சார் மோடி!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.கார்த்திகேயன்

மிழிசை சௌந்தரராஜன்... தமிழ்நாடு பா.ஜ.க-வின் தலைவர். 

''அகில இந்திய அளவில் பா.ஜ.க-வின் பெண் தலைவர் நான் மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கலைஞரின் அரசியல் சாதுர்யமும் ஜெயலலிதாவின் துணிச்சலும் ராமதாஸின் மக்கள் அக்கறையும் வைகோவின் பேச்சாற்றலும் விஜயகாந்தின் மக்கள் செல்வாக்கும்... இவை அனைத்தும் கலந்தவள்தான் இந்த தமிழிசை!''

''தமிழ்நாட்டில் பா.ஜ.க வலுவாகக் காலூன்ற, மோடி உங்களிடம் ஏதேனும் ஆலோசித்திருக்கிறாரா?''

''மோடி மாதிரியான மனிதாபிமானம் உள்ள தலைவரை நான் இதுவரை பார்த்தது இல்லை. திருச்சி மாநாட்டில் பேசும்போது என் பெயரை விட்டுவிட்டார். அதை யாரோ அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த மாதம் விமான நிலையத்தில் என்னைப் பார்த்ததும், ' 'தமிழிசை’ என்ற அழகான பெயரை நான் எப்படி மறந்தேன்!’ என ரொம்ப வருத்தப்பட்டார். நான் தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக்கப்பட்ட பின், அவரை டெல்லி வீட்டில் சந்தித்தேன். 'தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்த என்ன பண்ணப்போறீங்க?’ எனக் கேட்டார். கடகடவென சில திட்டங்கள் குறித்து அரை மணி நேரம் பேசினேன். இடையிடையே அவரும் நிறையக் கேள்விகள் கேட்டார். 'தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்க ஆசை’ எனச் சொல்லிச் சிரித்தவர், 'இப்ப உள்ள கூட்டணி எப்படி?, சட்டமன்றத் தேர்தலில் யார்கூட கூட்டணி வைக்கலாம்?, தனியா நின்னா எவ்வளவு எம்.எல்.ஏ ஜெயிப்பீங்க?’ என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டார். '122 எம்.எல்.ஏ-க்கள்’னு சொன்னேன். 'ஆகா... கேட்க நல்லா இருக்கு’னு சிரிச்சவர், சட்டமன்றத் தேர்தல்ல வலுவான கூட்டணியை முடிவுபண்ணுங்க’னு சொல்லி அனுப்பினார்!''

“ ‘122 எம்.எல்.ஏ-க்கள் ஜெயிப்போம்’னு சொன்னேன் ...சிரிச்சார் மோடி!”

''மோடி சொன்ன வலுவான கூட்டணியை முடிவுபண்ணிட்டீங்களா? அதற்காகத்தான் அ.தி.மு.க-வை நோக்கி நகர்கிறீர்களா?''

''நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. தே.மு.தி.க-வும் பா.ம.க-வும் பா.ஜ.க கூட்டணியில் இல்லை என அறிவிக்கவில்லை. அவை எங்கள் கூட்டணியில் இருப்பதாக நம்புகிறோம். அ.தி.மு.க பற்றி கேட்டீர்கள். எனக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும். மற்றபடி சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன.''

'பயணம், படாடோப அறிவிப்பு... என மோடி அரசு ஆடம்பர விளம்பர அரசாகவே இருக்கிறது எனக் குற்றச்சாட்டுகள் குவிகின்றனவே...''

''காங்கிரஸைத் துடைத்து எறிந்து பா.ஜ.க-வை அரியணை ஏற்ற, மோடி கொட்டிய உழைப்பு கொஞ்சநஞ்சம் அல்ல. மக்கள் மீது உள்ள அக்கறையே அந்த உழைப்புக்குக் காரணம். ஆடம்பரமாக வாழ, பணம் சேர்க்க அவருக்கு என்ன குழந்தையா... குட்டியா? மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் அவருக்குச் சொந்தம் கிடையாது. அவர் நண்பர் ஒருவர், தன் குடும்பத் திருமணத்துக்காக 10 லட்சம் ரூபாயில் ஒரு கோட் வாங்கிக் கொடுத்து, அதை மோடியை அணியச் சொல்லி இருக்கிறார். உங்கள் நண்பர் உங்களுக்கு அப்படி வாங்கிக் கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வீர்கள்? அவர் மனது கஷ்டப்படக் கூடாது என அணிந்துகொள்வீர்கள்தானே! அதையேதான் அவரும் நினைத்தார்... செய்தார். உடனே, 'ஏழைப் பங்காளனுக்கு 10 லட்சத்தில் உடை தேவையா?’ எனக் கோஷமிட்டால் என்ன செய்வது? அதையும் நான்கு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விட்டு மக்கள் சேவைக்குத்தான் அளித்தார்!''

“ ‘122 எம்.எல்.ஏ-க்கள் ஜெயிப்போம்’னு சொன்னேன் ...சிரிச்சார் மோடி!”

''ஜெயலலிதா அரசு, கிட்டத்தட்ட நாலரை ஆண்டுகளைப் பூர்த்திசெய்துவிட்டது. இந்த ஆட்சிக்கு எத்தனை மார்க் கொடுப்பீர்கள்?''

'இந்த ஆட்சியில் பல மைனஸ்கள் இருக்கின்றன. முதலமைச்சர், எளிதில் காண முடியாத காணொளி முதலமைச்சராக இருப்பதுதான் பெரிய மைனஸ். லஞ்சம், ஊழல் அதிகரித்து உள்ளன. கிரானைட் கொள்ளை, மணல், கனிமக் கொள்ளை எதையுமே தடுக்கவில்லை. ப்ளஸ் என்றால் அம்மா உணவகங்கள், மருந்தகங்கள், பிறந்த குழந்தைகளுக்கு 16 வகையான இலவசப் பொருட்கள்னு சிலவற்றைச் சொல்லலாம். கூட்டிக்கழித்துப் பார்த்தால் 100-க்கு 40 மதிப்பெண்கள் வழங்கலாம்!''

“ ‘122 எம்.எல்.ஏ-க்கள் ஜெயிப்போம்’னு சொன்னேன் ...சிரிச்சார் மோடி!”
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு