Published:Updated:

இமாச்சல பிரதேசத்தில் நாளை தேர்தல்!

இமாச்சல பிரதேசத்தில் நாளை தேர்தல்!
இமாச்சல பிரதேசத்தில் நாளை தேர்தல்!
இமாச்சல பிரதேசத்தில் நாளை தேர்தல்!

சிம்லா:இமாச்சல் பிரதேசத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

68 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில், 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவிற்காக 7,253 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

##~~##
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநில போலீசாருடன் இணைந்து, ராணுவத்தினரும்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவிற்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கனை , வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.