Published:Updated:

இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி: ஷிண்டேவுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை!

இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி: ஷிண்டேவுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை!
இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி: ஷிண்டேவுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை!
இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி: ஷிண்டேவுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை!

மும்பை: சுய மரியாதை மற்றும் தேசப்பற்றுள்ள இந்துக்கள் ஒருபோதும் பாகிஸ்தானுடன்  இந்தியா மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்கமாட்டார்கள் என்று கூறியுள்ள  சிவசேனா தலைவர் பால் தாக்கரே,இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுசில்  குமார் ஷிண்டே கூறியுள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான  கிரிக்கெட் உறவை இந்தியா துண்டித்துக்கொண்டது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகள்,அடுத்த மாதம்  மீண்டும் தொடங்க உள்ளன.இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய வர உள்ளது.

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று கருத்து தெரிவித்திருந்த சுசில் குமார்  ஷிண்டே,"கடந்துபோனது கடந்துபோனதாகவே இருக்கட்டும்.விளையாட்டுக்களை  அரசியலிலிருந்து விலக்கி வைப்போம்.அடுத்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி  இந்தியாவில் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தை வரவேற்போம்.

உலகின் எந்த ஒரு இடத்திலிருந்தும்,எந்த ஒரு விளையாட்டு வீரரும் இந்தியா வந்து  விளையாடட்டும்.நாம் அதனை தடுக்கக்கூடாது.நட்புறவுகளை நாம் வளர்த்துக்கொள்ள  வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் ஷிண்டேவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, பால்தாக்கரே,  தனது கட்சி பத்திரிகையான 'சாம்னா’வில் மேற்கூறிய கண்டனத்தை  தெரிவித்துள்ளதோடு,அவர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளார்.

##~~##
" ஷிண்டே சாகிப்...! உங்களுக்கு சிறிதேனும் வெட்கம் இருந்தால் உங்களது கருத்தை  வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில் இந்தியவைல் திட்டமிடப்பட்டுள்ள  இடங்களில் பாகிஸ்தான் அணி விளையாடுவதை சுயமரியாதை மற்றும் தேசப்பற்றுள்ள  இந்துக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
பாகிஸ்தான் அணி விளையாட உள்ள டெல்லி,கொல்கத்தா,சென்னை மற்றும் பெங்களூரு  ஆகிய இடங்களில் ஒருமுறையாவது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்  நடத்தியிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பாதம் மகராஷ்ட்ராவில் படாது. ஆனால் அவர்கள்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள நகரங்கள் தேசிய அவமானம்” என்று தாக்கரே அதில்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.