Published:Updated:

திமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
திமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
திமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவிடைமருதூர், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் பெற்ற வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திருவிடைமருதூர் தொகுதியில் கோவை செழியனும், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் செங்குட்டுவனும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வெளியானது.

அதில், திருவிடைமருதூர் மற்றும் வேப்பனஹள்ளி தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் பெற்ற வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.