Published:Updated:

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! #Jayalalithaa

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! #Jayalalithaa

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! #Jayalalithaa

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! #Jayalalithaa

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! #Jayalalithaa

Published:Updated:
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! #Jayalalithaa

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ காட்சியை ஊடகங்கள் வெளியிடக் கூடாது எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தடைக்கு ஊடகத்தினர், எழுத்தாளர்கள் மற்றும் கருத்துரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இன்று நடக்க உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-வது பிரிவு உட்பிரிவு 1- (அ)ன்படி, இந்த 48 மணி நேரத்தில், தேர்தல் தொடர்பாக பொதுக்கூட்டமோ பேரணியோ யாரும் நடத்தக் கூடாது; (ஆ)படி, திரைப்படம் மூலமாகவோ தொலைக்காட்சி மூலமாகவோ பொதுமக்களுக்குத் தேர்தல் சங்கதிகளைக் காண்பிக்கக் கூடாது; (இ)படி, இதே காரணத்துக்காக, பொதுமக்களைக் கவரக்கூடிய இசைநிகழ்ச்சியையோ நாடக நிகழ்வையோ மற்ற எந்தக் கேளிக்கை நிகழ்ச்சியையோ நடத்தக்கூடாது. இதை மீறுவோருக்கு இரு ஆண்டுகள்வரை சிறைவாசமோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். இதில் தேர்தல் சங்கதி (Election matter) என்பதற்கு தேர்தல் முடிவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சங்கதி எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் சொல்கிறது. 

தேர்தல் ஆணையத்தின் உத்தரவிலுமே இதுதான் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. முகநூல், வாட்ஸ்அப் செயலி போன்றவற்றின் மூலம் காலை முதல் மதியம் பரவிவிட்ட பின்னர் குறிப்பிட்ட ஜெயலலிதாவின் காணொளியைத் தடுக்கமுடியுமா என்றெல்லாம் பல தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர். அதைவிட முக்கியமானதாக, கருத்துரிமை மறுப்பாகவே இதைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் இன்னொரு தரப்பினர். அவர்கள் கூறுவது என்ன? இதோ: 

சுசீலா ஆனந்த் (வழக்குரைஞர்): 

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. அனைத்துக்கும் வாதங்கள் உண்டு. தேர்தல் குறித்த சேதிதான் இருக்கக்கூடாதேயொழிய, எந்த வீடியோ காட்சியும் வரக்கூடாது என்பது அல்ல. அந்தக் குறிப்பிட்ட வீடியோவில் தேர்தல் குறித்த செய்தி, பிரசாரம் எதுவும் இல்லை. அதைத்தாண்டி விசாரணை என்றால் நோட்டீஸ் கொடுப்பார்கள். விசாரணைக்கு அழைப்பார்கள். போய் போய் வர வேண்டியதுதான். தேர்தல் வழக்குகளுக்கு எந்தக் கால அளவுகளும் கிடையாது. உள்ளபடியே தேர்தல் விதிகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமானால் ஓட்டுக்கு 6000 ரூபாய் தந்து கையும்களவுமாகப் பிடிக்கப்பட்டவர்கள்மீது எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் செய்ததுதான் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. மதுரை எம்.எல்.ஏ. வெற்றிபெற்றது செல்லாது எனத் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது. இதுமாதிரியான தேர்தல் முறைகள் கட்சிகளுக்குத்தான் சாதகமாகவே இருக்கின்றன. இந்தத் தேர்தல் முறையில் கட்டாயமாகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை உணர்த்தும் இன்னொரு தருணம்”

பாலா (கேலிச்சித்திரக்கலைஞர்):

"ஒரு செய்தியை வெளியிடக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் எப்படிச் சொல்லமுடியும்? மோடி வந்துபோனதேகூட தேர்தல் தொடர்பான செய்திதான்; செய்தி ஊடகத்துக்கு நடப்பு நிலவரங்கள் எல்லாமே ஒரு விஷயம்தானே? ஜெயலலிதாவைக் காட்டும் இந்தக் காணொளிக்காட்சி என்பது  நாடளவிலான செய்தி. ஒரு முன்னாள் முதலமைச்சர் இறந்தது, சாதாரணமானதாக இல்லை. அது மர்ம மரணமாக இருக்கையில், ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான இந்தக் காணொளியானது முக்கியமான சாட்சியமாக இருக்கக்கூடும். இதைப் பற்றி பொதுத்தளத்தில், மக்கள்மத்தியில் விவாதிக்க வேண்டும். இப்படியான நிலையில் இந்தக் காணொளியைக் காட்டவேகூடாது என தடுப்பதற்கான உரிமை, தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதாக நான் கருதவில்லை. அதன் ஆணையானது, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை”.

ராதிகா சுதாகர் (பத்திரிகையாளர்):

" தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கும் விதி, தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கானது. தமிழகத்தையே கட்டுப்படுத்தும் என்று சொல்வது முதலில் நீதிமன்றத்தில் நிற்கஇயலாது. அடுத்து, தேர்தல் ஆணையம் முன்னாள் முதல்வரின் சமீபத்திய காணொளி வெளியீட்டைத் தடைசெய்திருப்பது தேர்தல் விதியின்படி என்பது பொதுஅறிவுக்கு ஒவ்வாத, சட்டத்துக்கு ஒவ்வாத வாதமாகத்தான் பார்க்கமுடிகின்றது. அது ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் உள்ளது. தேர்தலில் நிற்கும் ஒரு தரப்பின் செயல்பாடாக மட்டுமே இந்தக் காணொளி வெளியீட்டை தேர்தல் ஆணையம் சுருக்கிப்பார்க்க முடியாது, வெளியீட்டில் எந்த அரசியல் இருந்தாலும் இந்தக் காணொளி ஆர்.கே.நகரில் வெளியிடப்படவில்லை. ஆகவே, தேவையில்லாமல் பேச்சு சுதந்திரத்தில் தலையிட்டதாகவே கொள்ளமுடியும். அரசியலுக்கு அப்பால் ஊடகங்களைப் பொறுத்தவரை, அது ஒரு தகவல் காணொளி. அதனை ஊடகங்கள் வெளியிடுவதும் விவாதிப்பதும் ஊடக அறத்துக்கும் செயல்பாட்டுக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் உட்பட்டது. அதையும்தாண்டி மக்களுக்கான தகவல் அது. 

1957 பஞ்சாப் மாநிலம் எதிர் வீரேந்திர எனும் வழக்கில் பேச்சுரிமை குறித்து அரசியலமைப்புச் சட்ட விதிகள் விவாதிக்கப்பட்டு கொள்ளப்பட்ட கருத்து இதுதான்: "ஒரு நாளிதழின் மேல் கருத்துரிமை தடையோ அல்லது அந்நாளில் பற்றிஎரியும் விவகாரத்தைப் பற்றி நாளிதழ் தன் சொந்தக் கருத்தையோ அல்லது செய்தியாளர் கருத்தையோ வெளியிடத் தடைவிதிப்பது பேச்சு சுதந்திர உரிமையை (freedom to right of speech and expression) மறுப்பதாகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊடக சுதந்திரம் என்பது எல்லா சுதந்திரங்களுக்கும் தாய் என்றும் அது கூறியுள்ளது. 

தேர்தல் ஆணையம் வலிந்து இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. தடைசெய்யப்பட்ட காணொளிக்கும் ஆர் கே நகர் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்று தேர்தல் ஆணையம் விளக்கவேண்டி வரும். ஏற்கெனவே, டெல்லி நீதிமன்றத்தில் தொப்பி சின்னம் வழங்க வேண்டும் என தினகரன் தொடுத்த வழக்கில், "நீங்கள் யார் தரப்புக்குச் சார்பு" என்று  தேர்தல் ஆணையம் குட்டுவாங்கியது. மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி எங்களைக் கட்டுப்படுத்தும் என்ற கேள்வியை ஊடகங்களும் தேர்தல் ஆணையரிடம் சேர்ந்து கேள்வி எழுப்பவேண்டும்."