Published:Updated:

கனிமொழியை வரவேற்கத் திரளும் தொண்டர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கனிமொழியை வரவேற்கத் திரளும் தொண்டர்கள்!
கனிமொழியை வரவேற்கத் திரளும் தொண்டர்கள்!

கனிமொழியை வரவேற்கத் திரளும் தொண்டர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் நாளை (டிசம்பர் 23-ம் தேதி) காலை 11.45 மணிக்கு சென்னை வருகிறார்கள். டெல்லியிலிருந்து விமானத்தில் வரும் அவர்களை, சென்னை விமானநிலையத்துக்குச் சென்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்கிறார். 

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் தனி நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பு தி.மு.க-வினரை உற்சாகத்தில் துள்ள வைத்தது. அறிவாலயத்தில் பட்டாசு வெடித்துக்கொண்டாடினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இருக்கும் கனிமொழி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று கலந்துகொண்டார். நாளை காலை, அவர் சென்னை திரும்புகிறார். ஆ.ராசாவும் அதே விமானத்தில்தான் வருகிறார். இருவரும் 11.45 மணிக்கு சென்னை வருகிறார்கள்.

அவர்களை வரவேற்க தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்துக்குச் செல்கிறார். தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் அனைவரும் இன்று காலையிலேயே சென்னை வந்துவிட்டார்கள். அரியலூர் , பெரம்பலூர், நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என்று பல மாவட்டங்களிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் நாளை காலை சென்னை வருகிறார்கள். அவர்கள், கனிமொழி, ஆ.ராசாவை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் திரள்கிறார்கள். மேளம், தாளம் என்று வரவேற்புக்கு தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோபாலபுரம் வந்து தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் அவர்கள் ஆசி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின், ''வழக்கை பெரிய அளவில் ஊதிப் பெரிதாக்கிச் சித்தரித்து, பொய்க் கணக்குகளை எல்லாம் உண்மை போலக் காட்டி வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்து விளம்பரம் செய்து, கழகத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்கு நமது எதிராளிகள் எல்லாம் எவ்வளவோ முயன்றார்கள். ஆனால், நிரூபிக்கத் தேவையான முகாந்திரம் இல்லாததால், வழக்கிலிருந்து  அனைவருமே குற்றமற்றவர்கள் என டெல்லி தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. எனவே, தி.மு.க-வைப் பொறுத்தவரையில் இந்த வழக்கில் களங்கமற்றவர்கள் என்பதைத் தனி நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பின் மூலம் நிலைநாட்டி இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்று. பலமுறை புடம்போட்ட பத்தரைமாற்றுப் பொன்தான் கழகம் என்பது மீண்டும் உறுதியாகி இருக்கிறது. தலைவர் கலைஞர் “அநீதி வீழும் அறம் வெல்லும்” என்று சொன்னதைப்போல, இன்றைக்கு “அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு