Published:Updated:

"விஷவண்டு கடி வேணுமா? எங்க ஊரு மேம்பாலத்துக்குக் கீழ வாங்க!" - 'கஷ்டத்தோடு' அழைக்கும் லாலாப்பேட்டை மக்கள்!

"எங்க ஊரு ரயில்வே கேட் மேம்பாலத்துல இரண்டு பக்கமும் விஷவண்டுகள் கூடு கட்டி இருக்கு. லேசா காத்து அடிச்சாலே 'கொய்ங்'கிற சத்தத்தோட, பறந்து வந்து அந்த வழியாகப் போற வர்ற மக்களையும், வாகனங்களில் போகும் பயணிகளையும் கடித்து கஷ்டப்படுத்துகிறது. அந்த விஷவண்டு கூடுகளை அப்புறப்படுத்துங்கன்னு பலர்கிட்ட மனு போட்டுட்டோம். யாரும் கண்டுக்கலை" என்று சோக கீதம் இசைக்கிறார்கள் லாலாப்பேட்டை கிராம மக்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கிறது லாலாப்பேட்டை. இந்த ஊராட்சிக்கும், சிந்தலவாடி ஊராட்சிக்கும் இடையில் கரூர் டு திருச்சி பைபாஸில் இருக்கும் மேம்பாலத்தில்தான் இரண்டு புறமும் விஷ வண்டுகள் கூடுகட்டி, சமயம் கிடைக்கும்போதெல்லாம் அந்த வழியாக வந்துபோகும் மக்களை விஷவண்டுகள் இஷ்டத்துக்குக் கடித்து வைப்பதாக மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். 'இந்த விஷவண்டு கூடுகளை அப்புறப்படுத்தி, மக்களைக் காபந்து செய்யுங்கள்' என்று அடுத்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன் குளித்தலை ஆர்.டி.ஓவிடம் புகார் கொடுத்துள்ளார். அவரிடமே பேசினோம். "இரண்டு நாள்களுக்கு ஒரு தடவை இந்த விஷவண்டுகள் பத்து பதினைந்து பேர்களை கடித்து வைக்கின்றன. அவர்களின் முகம், மூக்கெல்லாம் வீங்கிப் போய் அசிங்கமாயிடுது. இதனால், அவர்கள் வீக்கம் வடியும் வரை கூலி வேலைக்குப் போகமுடியாமல் தவிக்கிறார்கள். அதனால், இந்த விஷவண்டுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி குளித்தலை ஆர்.டி.ஓவிடம் புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.
 
அடுத்த கட்டுரைக்கு