Published:Updated:

2019-ல் ஸ்டாலின் முதல்வர்; ராகுல் பிரதமர் - குஷ்பு நம்பிக்கை!

2019-ல் ஸ்டாலின் முதல்வர்; ராகுல் பிரதமர் - குஷ்பு நம்பிக்கை!
2019-ல் ஸ்டாலின் முதல்வர்; ராகுல் பிரதமர் - குஷ்பு நம்பிக்கை!

2019-ல் ஸ்டாலின் முதல்வர்; ராகுல் பிரதமர் - குஷ்பு நம்பிக்கை!

வரும் 2019-ல் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகவும், ராகுல் காந்தி பிரதமராகவும் பதவியேற்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு பேசியுள்ளார்.


சென்னை வேலப்பன்சாவடியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன், தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, ‘டிஜிட்டல் இந்தியாவுக்கு வித்திட்டதே 2ஜி தான். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மீது சுமத்தப்பட்ட வீண்பழி தற்போது நீங்கியுள்ளது. தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், விரைவில் தமிழகத்தின் முதலமைச்சராவார். வரும் 2019-ல் தமிழக முதல்வராக ஸ்டாலினும், நாட்டின் பிரதமராக ராகுலும் பதவியேற்பார்கள்’ என்றார். 
 

அடுத்த கட்டுரைக்கு