Published:Updated:

போராட்டக் களமாகும் புதுக்கோட்டை மாவட்டம்!  -வீதியிறங்கி வெடிக்கும் மக்கள் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்

போராட்டக் களமாகும் புதுக்கோட்டை மாவட்டம்!  -வீதியிறங்கி வெடிக்கும் மக்கள் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்
போராட்டக் களமாகும் புதுக்கோட்டை மாவட்டம்!  -வீதியிறங்கி வெடிக்கும் மக்கள் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்

போராட்டக் களமாகும் புதுக்கோட்டை மாவட்டம்!  -வீதியிறங்கி வெடிக்கும் மக்கள் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்

போராட்ட களமாகும் புதுக்கோட்டை மாவட்டம்!  -வீதியிறங்கி வெடிக்கும் மக்கள் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்

புதுக்கோட்டை;  புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீப காலமாக மக்கள் போராட்டங்கள் அதிகரித்து இருக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களாக சாமானிய மக்கள் தங்களது அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராட ஆரம்பித்து விட்டார்கள்.குடிநீர்,சாலை, மின்சாரம், பேருந்து வசதிகளைக் கேட்டு திடீர் சாலைமறியலில் மக்கள் ஈடுபடுவதால், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.


கடந்த 15-ம் தேதி வடகாடு அருகில் உள்ள புள்ளான் விடுதியில் குடிநீர் வசதிக் கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் வெற்றுக் குடங்களுடன் சாலைமறியலில்  இறங்கிவிட்டார்கள்.

அடுத்ததாக, கறம்பக்குடி அருகில் உள்ள  தொண்டைமாணூர் என்ற கிராமத்தில் இதே பிரச்சினைக்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் குழுமிவிட்டனர். இதனால்,போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அந்தந்தப்பகுதி வட்டாட்சியர்,டி.எஸ்.பி.ஆகியோர் மக்களிடம் பேசி,கலைந்து போகச்செய்தனர். 'போலீசும் அதிகாரிகளும் போக்குவரத்து பிளாக் ஆவதை சீர் படுத்ததான் ஓடி வந்தார்களேத்தவிர,எங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை"என்கிறார்கள் புள்ளம்பாடிவிடுதி,தொண்டைமாணூர் கிராமமக்கள்.
இதே போல் நேற்று(22.12.2017) திருமயம் அருகேயுள்ள சவேரியார் புரத்தில் பனிரெண்டு கிராமங்களைச்சேர்ந்ந மக்கள் பஸ் வசதிக் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டார்கள். இவையெல்லாம் முன்னறிவிப்புடனும் அது இல்லாமலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துமுடிந்த மக்கள் போராட்டங்கள்.இதுதவிர,இந்த மாதமே அடுத்தடுத்து போராட்டங்கள், ஒருநாள் கடையடைப்பு போன்றவை நடக்க இருக்கின்றன.

இதில் கல்லுக்காரன்பட்டி கிராமமக்கள்,வருகிற 28-ம் தேதி தங்கள் ஆடு, மாடுகளை பிடிஓவிடம்( BDO) ஒப்படைக்கும் போராட்டத்தை போஸ்டர் அடித்து ஒட்டி அறிவித்திருக்கிறார்கள்.இவர்களது பிரச்சினை என்ன தெரியுமா?கடந்த ஒரு வருடமாக குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. தெருவில் இரவில் விளக்குகளே எரிவதில்லை."விளக்குகள் இருந்தால்தானே எரிவதற்கு.இதனால், ஊருக்குள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து விட்டது. மனுசங்களுக்கே குடிக்கத் தண்ணீர் இல்லை,இதில் ஆடு,மாடுகளை வைத்துக்கொண்டு நாங்கள் 'நொம்பல'ப்படணுமா?அதான் எங்கள் ஊராட்சி பிடிஓகிட்டேயே ஒப்படைக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்"என்கின்றனர் கல்லுக்காரன்பட்டி கிராமமக்கள்.
இதுபோன்ற  அடிப்படை பிரச்சினைகளுக்காக மக்கள் வெகுண்டெழுந்து போராடுவது ஒருபுறமிருக்க,பொதுப் பிரச்சனைகளுக்காக போராடுவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன. 


அந்தவகையில்,வருகிற முப்பதாம் தேதியன்று ,கறம்பகுடி கடைவீதியில் தீராத தலைவலியாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த இருக்கிறார்கள்."மனுக்கள் எத்தனையோ முறை கொடுத்துப் பார்த்துட்டோம். ஒரு நடவடிக்கையும் இல்லை. அதான்,பந்த் அறிவிச்சுட்டோம்'என்கிறார்கள் கறம்பகுடி வியாபாரிகள்.
இப்படி மாவட்டம் முழுக்க மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து இருப்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அவசர கூட்டம் போட்டு மக்களின் கோரிக்கைளை உடனடியாக நிறைவேற்றும் படி அந்தந்தப் பகுதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் எழாமல் பார்த்துக் கொள்ளும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.


 

அடுத்த கட்டுரைக்கு