Published:Updated:

சொந்த ஊர் அமைச்சர்களைத் தவிர்த்து விழா நடத்திய அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா..!

தன்னுடைய அரசியல் வரலாறு, மதுரைக்கு தான் கொண்டு வந்தத் திட்டங்களை 'கனவும் களமும்' என்ற தலைப்பில், புத்தகமாக வெளியிட்டுள்ளார் எம்.எல்.ஏ.ராஜன்செலப்பா. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமாரை அழைக்காமல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

சொந்த ஊர் அமைச்சர்களைத் தவிர்த்து விழா நடத்திய அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா..!

இதன் மூலம் ஆளும் கட்சிக்குள் நடக்கும் மோதல் வெளிவரத் தொடஙகியுள்ளது. அ.தி.மு.கவில் சீனியரான ராஜன்செல்லப்பா, ராஜ்யசபை எம்.பியாகவும், மதுரை மேயராகவும் பதவி வகித்தவர். தற்போது வடக்குத் தொகுதி எம்.எல்.ஏவாகவும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு பின்னால் அ.தி.மு.கவுக்கு வந்த செல்லூர்ராஜு, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள் அமைச்சர்களாக இருக்கும்போது, அரசியல் அனுபவம் நிறைந்த ராஜன் செல்லப்பாவுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லையே என்ற வருத்தம் அவருக்குண்டு. 

விவரம் தெரிந்தவர்களுக்கு பதவி வழங்காமல் காமெடி செய்பவர்களை அமைச்சர்களாக வைத்திருப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி, கவனத்தில் கொள்ளாமல் இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் நீண்ட நாட்களாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில்தான் தன்னுடைய அரசியல் வரலாற்றையும், மதுரைக்கு தான் செய்த பல்வேறு பணிகளையும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ராஜன் செல்லப்பா, மதுரையின் வளர்ச்சிக்கு என்னவெல்லாம் இனி செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு, மதுரையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களையும் இடித்துக் காட்டியிருக்கிறார்.

பாண்டியன் ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், போலிஸ் கமிஷனர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். உயர் நீதிமன்ற நீதிபதி, தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் சரவணன், பெரியபுள்ளான் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு