Published:Updated:

எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கு அப்துல்கலாம் நினைவகம்: குடியரசுத் தலைவர் பெருமிதம்

எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கு அப்துல்கலாம் நினைவகம்: குடியரசுத் தலைவர் பெருமிதம்
எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கு அப்துல்கலாம் நினைவகம்: குடியரசுத் தலைவர் பெருமிதம்

எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கு அப்துல்கலாம் நினைவகம்: குடியரசுத் தலைவர் பெருமிதம்

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள டாக்டர் அப்துல்கலாம் நினைவகம் அவரது வாழ்க்கையை பிரதிபலிப்பதுடன், எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் தூண்டுகோளாகவும் உள்ளது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ராமேஸ்வரம் வருகை தந்திருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மண்டபத்திற்குச் சென்ற அவர் வழியில் பேக்கரும்புவில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் நினைவிடத்திற்குச் சென்றார்.


 

அங்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் டைரக்டர் ஜெனரல் சக்குவான் அகம்மது, தலைமை நிர்வாக பொறியாளர் அஜய்சிங், கர்னல் ரவிச்சந்திரன், தலைமை கட்டுமான பொறியாளர் செளபே மற்றும் கலாமின் பேரன்கள் ஷேக், சலீம் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தையும் வரவேற்றனர்.


 

இதனைத் தொடர்ந்து கலாம் நினைவகத்திற்குள் சென்ற குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நினைவகத்தை பார்வையிட்ட அவர் அங்கு வைக்கப்பட்டு பார்வையாளர் வருகை புத்தகத்தில் கையெழுத்திட்டார். அந்த புத்தகத்தில், 'இந்தியாவின் மிகச் சிறந்த விஞ்ஞானியும், உண்மையான மண்ணின் மைந்தருமான டாக்டர் அப்துல்கலாமிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினர் இந்த நினைவகத்தை அமைத்துள்ளனர். கலாமின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த நினைவகம் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும், தூண்டுகோளாகவும் விளங்கும்' என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் நினைவிடத்திற்கு வெளியே வந்த குடியரசுத் தலைவர் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கும்பிட்டபடி வணக்கம் தெரிவித்ததுடன், தனது குடும்பத்தினருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு இன்று பகல் 2 மணி வரை கலாம் நினைவிடத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
 

அடுத்த கட்டுரைக்கு