Published:Updated:

அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்த ஓ.பி.எஸ் சம்பந்திக்கு ஏஐஜி பதவி!

அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்த ஓ.பி.எஸ் சம்பந்திக்கு ஏஐஜி பதவி!
அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்த ஓ.பி.எஸ் சம்பந்திக்கு ஏஐஜி பதவி!

அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்த ஓ.பி.எஸ் சம்பந்திக்கு ஏஐஜி பதவி!

அரசுக்கு எதிராக வழக்கு போட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்திக்கு மீண்டும் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக நான்கு பேர் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இதில் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் பெயரும் உள்ளது. இவர் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் சம்பந்தியாவார். 

அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்த ஓ.பி.எஸ் சம்பந்திக்கு ஏஐஜி பதவி!

ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு எதிராக தனி அணியாக செயல்பட தொடங்கியபின், அவருக்கு ஆதரவான ஆள்கள் வகித்த அரசுப்பதவிகள் பிடுங்கப்பட்டன. அதில் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வந்த செல்லப்பாண்டியன் பதவி பிடுங்கப்பட்டு அவருக்கு பதிலாக புகழேந்தி நியமிக்கப்பட்டார். அதற்குப்பின் தான் வாதாடிய பல வழக்குகளுக்கு அரசு பல லட்ச ரூபாய் கட்டணம் வழங்காமல் இழுத்தடிக்கிறது, என்று தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தார் செல்லப்பாண்டியன். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஓ.பி.எஸ். மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைந்து துணைமுதலமைச்சர் ஆன பின், அவருடைய ஆதரவாளர்கள், உறவினர்கள் மீண்டும் பழைய பொறுப்புகளுக்கு திரும்ப வருகிறார்கள். அந்த அடிப்படையில் செல்லப்பாண்டியனுக்கு மீண்டும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும், அரசை எதிர்த்து வழக்கு போட்டவருக்கு கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பொறுப்பா என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு