Published:Updated:

அம்ருதாவை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாடேன்! - சபதம்போடும் புகழேந்தி.

அம்ருதாவை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாடேன்! - சபதம்போடும் புகழேந்தி.
அம்ருதாவை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாடேன்! - சபதம்போடும் புகழேந்தி.

அம்ருதாவை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாடேன்! - சபதம்போடும் புகழேந்தி.

அம்ருதாவை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாடேன்! - சபதம்போடும் புகழேந்தி.

"அம்ருதாவை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன்" என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கோவையில் அதிரடி கிளப்பியுள்ளார்.

மருத்துவப் பரிசோதனைக்காக கோவைக்கு வந்த தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன்தான்  வெற்றி பெறுவார். அதன்பின்பு,  அத்தனை எம்.எல்.ஏக்களும் தினகரன் பக்கம் வந்துவிடுவார்கள். காட்சி மாறப்போகிறது. ஆட்சி அமைப்பு மாறப்போகிறது. காத்திருந்து பாருங்கள். ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டதற்கும், தினகரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வீடியோவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.  

வீடியோவில் தவறு இருக்கிறது ஏன நிரூபிக்கப்பட்டால், நாங்கள் அரசியலை விட்டே வெளியேறத் தயார். பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்வதை வைத்துக்கொண்டு நீதிமன்றம் கேள்வி எழுப்புவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிலர் திட்டமிட்டு இப்படிச் செய்கிறார்கள். ஜெயலலிவின் புகழுக்கு  களங்கம் ஏற்படுத்துவதற்காக பொய் பிரசாரம் செய்யும் அம்ருதா மீது முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ இதுவரை ஒரு  வழக்கு தொடரவில்லை. அவ்வளவுதான் ஜெயலலிதா மீது அவர்களுக்கு உள்ள பற்று. ஆனால், நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது. இது தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடர உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அம்ருதாவை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன். 2ஜி தீர்ப்பை நாங்கள் வரவேற்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை.  மேல்முறையீட்டு வழக்கை தி.மு.கவினர் சந்திப்பார்கள். மதுசூதனன் வெற்றி பெற்று அமைச்சராகி விடுவாரோ என்ற பயம் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உள்ளது. தினகரன் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் செல்லும் போது யார் யார் 'ஸ்லீப்பர் செல்' என்பது தெரியவரும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு