Published:Updated:

ஒகி புயலில் உயிர் தப்பிய இடிந்தகரை மீனவர்கள்: நேரில் சந்தித்து நலம் விசாரித்த எம்.எல்.ஏ!

ஒகி புயலில் உயிர் தப்பிய இடிந்தகரை மீனவர்கள்: நேரில் சந்தித்து நலம் விசாரித்த எம்.எல்.ஏ!
ஒகி புயலில் உயிர் தப்பிய இடிந்தகரை மீனவர்கள்: நேரில் சந்தித்து நலம் விசாரித்த எம்.எல்.ஏ!

ஒகி புயலில் உயிர் தப்பிய இடிந்தகரை மீனவர்கள்: நேரில் சந்தித்து நலம் விசாரித்த எம்.எல்.ஏ!

ஒகி புயலில் சிக்கி கடலில் தத்தளித்த இடிந்தகரையைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிர் தப்பி சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். அவர்களை ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

கடந்த நவம்பர் 30-ம் தேதி வீசிய ஒகி புயலில் சிக்கி மீனவர்கள் பலர் கடலில் திசைமாறிச் சென்றனர். குமரி மாவட்டத்தின் தூத்தூர் கிராமத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்களுடன் நெல்லை மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்த அமுதன், அஜின் ஆகியோரும் சென்றிருந்தனர். அவர்கள் சென்ற விசைப்படகு புயலில் சிக்கியதால் குறித்த காலத்தில் கரைதிரும்பவில்லை. அதனால் உறவினர்கள் கவலையில் இருந்தனர். 

இதேபோல, குஜராத் மாநிலத்தில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற இடிந்தகரை மீனவர்களான டொலசால், லிவிங்ஸ்டன் ஆகியோர் குறித்து ஒகி புயலுக்குப் பின்னர் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால் அவர்களது நிலைமை குறித்து உறவினர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இதையடுத்து கடலுக்குள் சிக்கிக் கொண்ட இந்த 4 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இடிந்தகரை மக்கள், ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான இன்பதுரையிடம் கோரிக்கை விடுத்தனர். 

இதுதொடர்பாக டிசம்பர் 4-ம் தேதி முதல்வரை நேரில் சந்தித்த இன்பதுரை எம்.எல்.ஏ, தனது தொகுதிக்கு உட்பட்ட இடிந்தகரையில் மீனவர்கள் நால்வரையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்த 4 மீனவர்களையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. குஜராத் மாநிலத்தில் இருந்து கடலுக்குள் சென்ற டொலசால், லிவிங்ஸ்டன் ஆகியோர் கடலோரக் காவல்படையினரின் உதவியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் இரு மீனவர்களும் லட்சத்தீவு அருகில் உள்ள மினிக்காய் தீவில் தத்தளித்த நிலையில் சக மீனவர்களால் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து பத்திரமாக கரை திரும்பிய 4 மீனவர்களையும் இன்று நேரில் சந்தித்த இன்பதுரை எம்.எல்.ஏ, அவர்களிடம் உடல் நலம் விசாரித்தார். அவர்களுக்கு தமிழக அரசின் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். மீனவர்களும் தங்களை மீட்க உதவிய சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

அடுத்த கட்டுரைக்கு