Published:Updated:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது..! கங்கை அமரன் வேதனை

திருப்பூரில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் நடைபெற்ற சுமங்கலி பூஜையைத் தொடங்கி வைக்க பா.ஜ.க இலக்கிய அணி நிர்வாகி கங்கை அமரன் இன்று திருப்பூர் வந்திருந்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உடல்நிலை சரியில்லாத காரணங்களால் நான் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஒருவர் 50 கோடி ரூபாய் வைத்திருந்தால் ஒரு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஆகிவிடலாம் என்பதை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நமக்கு உணர்த்தியிருக்கிறது. தமிழகத்தில் இனி எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் பணம் பெற்று வாக்களிக்கும் நிலைமைக்கே தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.கவினரே அவர்களது கட்சிக்கு வாக்களிக்காத நிலையில், அக்கட்சி வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு பணம் பாய்ந்திருக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை நடந்திருந்தும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பண விநியோகம் தராளமாக நடந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தல் மூலம் ஜனநாயகம் கேள்விக்குறி ஆகியுள்ளது' என்று தெரிவித்தார்.