

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று துவங்கிய நிலையில், முதல் மற்றும் இரண்டாவது சுற்று ஏலம் விறு விறுப்பில்லாமல் மந்தமாகவே காணப்பட்டடது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்குவதில்,பெரும் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து,இதுகுறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக,உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது,விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறி,தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
யூனிநார்(22),வீடியோகான்(21),லூப்(21),ஐடியா(13) சிஸ்டெமா ஷியாம்(21), எடிசாட் (15),எஸ் டெல்(6) மற்றும் டாடா டெலிசர்வீஸ்(3 சி.டி.எம்.ஏ.,) நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் இதில் ரத்தாயின.
இதனையடுத்து ரத்து செய்யப்பட்ட உரிமங்களுக்கு பதிலாக, புதிய உரிமங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் துவங்கின.
இதில் பங்கேற்பதற்காக பார்தி ஏர்டெல்,வோடபோன்,ஐடியா செல்லுலர்,டெலிநார், டாடா டெலிசர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய தொலை தொடர்பு துறையிடம் விண்ணப்பித்திரு்ந்ததாக தகவல் வெளியானது.
##~~## |