Published:Updated:

“அப்பா என்றால் அன்பு!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.ராஜசேகரன்

ன்புமணி ராமதாஸ் - சௌமியா தம்பதிக்கு மூன்று மகள்கள். மூத்தவர் சம்யுக்தா பிரிதிவன்,

“அப்பா என்றால் அன்பு!”

தனியார் கல்லூரி ஒன்றில் ஆர்க்கிடெக் படிக்கிறார். இவருக்கும் மருத்துவர் பிரிதிவனுக்கும் இடையே கடந்த ஆண்டு நடந்த திருமணத்துக்குத் தலைமை தாங்கியவர், கருணாநிதி. இரண்டாவது மகள் சங்கமித்ரா. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு மாணவி. மூன்றாவது மகள் சஞ்சுத்ரா, சர்ச் பார்க் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.

“அப்பா என்றால் அன்பு!”

அன்புமணி ப்ளஸ் டூ படிக்கும்போது, அப்பா ராமதாஸ்தான் அவரது கோச். மதியம் 12 மணிக்கு மருத்துவப் பணி முடித்து வந்ததும் 2 மணி வரை வீட்டிலேயே கோச்சிங், டெஸ்ட் எல்லாம் நடக்குமாம். அந்த ஆண்டில் அன்புமணிதான் ப்ளஸ் டூ-வில் மாவட்ட அளவில் முதல் மாணவர். அதேபோல அன்புமணியின் மருமகன் பிரிதிவனுக்கும் ப்ளஸ் டூ கோச், மருத்துவர் ராமதாஸ்தான். அவரும் மாவட்ட அளவில் முதல் மாணவர்.

“அப்பா என்றால் அன்பு!”
“அப்பா என்றால் அன்பு!”

மகள்கள் மூவருக்கும் அப்பா அன்புமணி அருகில் படுத்துத் தூங்க பெரிய போட்டியே நடக்குமாம். 'எங்களுக்குள்ள இதுக்குத்தான் பெரிய தள்ளுமுள்ளே நடக்கும். காரணம், காலையில அப்பாவை இறுக்கிப்பிடிச்சுக் கொஞ்சிக்கிட்டே 'இன்னைக்கு ஸ்கூலுக்குப் போகலைப்பா’னு சொன்னா, 'சரிடா செல்லம். போகாத’னு சொல்லிடுவார்'' எனச் சிரிக்கிறார்கள்.

“அப்பா என்றால் அன்பு!”

குடும்பத்தினருக்கு ஆச்சர்யம் கொடுப்பதில் அன்புமணிக்கு அவ்வளவு ஆசை.

“அப்பா என்றால் அன்பு!”

'எங்களுக்குக் கல்யாணம் ஆனதில் இருந்தே சின்னச்சின்னதாக பல சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பார். அவர் மத்திய அமைச்சரா இருந்த சமயம், நாங்க குடும்பத்தோடு மலேசியா போயிருந்தோம். மீட்டிங் இருந்ததால் அவர் மலேசியா வரலை. நாங்க ஊர் சுத்திட்டு இரவு தூங்கிட்டோம். அதிகாலை 4 மணிக்குக் கதவைத் தட்டும் சத்தம். திறந்துபார்த்தால் சார் நிற்கிறார். உண்மையாவே இவர்தானா, இல்லை மனப்பிரமையானு தொட்டுப் பார்த்துக்கிட்டேன். கொஞ்ச நேரம் எங்ககூட இருந்துட்டு அடுத்த ஃப்ளைட்ல கிளம்பிட்டார். குடும்பம் மீது சாருக்கு அவ்வளவு பிரியம்'' எனப் பூரிக்கிறார் சௌமியா.

“அப்பா என்றால் அன்பு!”
“அப்பா என்றால் அன்பு!”

பொங்கல் சமயத்தில் தைலாபுரம் தோட்டம் களைகட்டும். ராமதாஸ் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் ஆஜராகி ஆடல், பாடல் எனக் கொண்டாடுவார்கள். அதில் 'குற்றாலக் குறவஞ்சி’ வரலாற்று நாடகத்தில் சௌமியா நடித்திருக்கிறார். 'அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே...’ பாடலையும், 'எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு, நேரம் உண்டு வாழ்விலே...’ பாடலையும் அன்புமணி விரும்பிப் பாடுவாராம்.

“அப்பா என்றால் அன்பு!”

'அப்பா உங்களைச் செல்லமா எப்படிக் கூப்பிடுவார்?' என மகள்களிடம் கேட்டால், மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொள்கிறார்கள். 'அப்பா என்னை செல்லமா 'பெரிய கழுதை’னு கூப்பிடுவார். சங்கமித்ராவை 'சின்னக் கழுதை’னும், சஞ்சுத்ராவை 'குட்டி நாய்’னும் கூப்பிடுவார். அப்படி கூப்பிட்டாதான் எங்களுக்கும் பிடிக்கும். அப்பா எங்ககிட்ட கோபமே பட மாட்டார். அப்படிக் கோபப்பட்டார்னா, நாங்க ஏதாவது தப்பு செஞ்சிருக்கோம்னு அர்த்தம்'' என்கிறார் சம்யுக்தா.

“அப்பா என்றால் அன்பு!”
“அப்பா என்றால் அன்பு!”

சுற்றுலா செல்லும்போது அந்தந்த ஊர் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது அன்புமணி குடும்பத்தின் வழக்கம். 'முதலைக்கறிகூட சாப்பிட்டிருக்கோம். ஒருமுறை ஜப்பான் போனபோது சஞ்சுத்ரா, பச்சை மீனை அப்படியே சாப்பிட்டிருக்கா'' என்கிறார் அன்புமணி.

“அப்பா என்றால் அன்பு!”

அன்புமணிக்கு சிறு வயதில் இருந்தே அட்வெஞ்சர் பிடிக்குமாம். ஸ்கூபா டைவிங், ஆழ்கடலில் மீன் பிடித்தல், மலைகளில் நீண்டதூரப் பயணம் எல்லாம் அவருக்குப் பிடித்தமானவை. தற்போது மூன்று மகள்களும் அப்பா வழியில் ஸ்கூபா டைவிங், ஆழ்கடலில் மீன்பிடித்தல் என சாகசப் பிரியைகள்.