Published:Updated:

ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!

திகதிகு ஸ்டாலின்ம.கா.செந்தில்குமார்

'நமக்கு நாமே’ என ஆஃப்லைன், ஆன்லைன் இரண்டிலும் டிரெண்டிங் கிளப்புகிறார் மு.க.ஸ்டாலின்.  தேர்தல் தொலைவில் இருந்தாலும், வாக்குப்பதிவு நாள் வரைக்குமான 'தினசரி அஜெண்டா’ இப்போதே ஸ்டாலின் கையில். அவரோடு ஒரு புல்லட் பேட்டி... 

ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!
ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!

''மறக்க முடியாத கோபாலபுர நாட்கள்?''

''இளைஞர் தி.மு.க-வை உருவாக்கி ஓடியாடி வியர்வை சிந்திய நாட்கள்!''

''சிறுவயதில் இருந்து இன்று வரை கடைப்பிடிக்கும் நல்ல பழக்கம்?''

''இரவு எந்த நேரம் படுக்கச் சென்றாலும், அதிகாலை எழுந்துவிடுவது!''

''சினிமாவில் நீங்கள் யார் ரசிகர்?''

''சிவாஜி கணேசன்!''

ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!
ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!
ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!
ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!

''அவரைத் தவிர பிடித்த நடிகர், நடிகை?''

''நடிகர் எம்.ஜி.ஆர்; நடிகை பானுமதி.''

''சமீபத்தில் பார்த்ததில் பிடித்த படம்?''

'' 'காக்கா முட்டை’!''

''அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்?''

''பட்டுக்கோட்டையாரின், 'சின்னப்பயலே சின்னப்பயலே... சேதி கேளடா’!''

ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!
ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!

''ஸ்லிம் ரகசியம்?''

''பசித்த பின் அளவோடு உண்பது!''

ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!

''தினசரி டயட்?''

''காலை நடைப்பயிற்சிக்கு முன்னர் மூன்று பேரீச்சம் பழங்கள், மூன்று பாதாம் பருப்பு. நடைப்பயிற்சிக்குப் பிறகு இளஞ்சூட்டுத் தேநீர். காலை டிபன் இட்லி அல்லது தோசை. மதிய உணவாக விரும்பிச் சாப்பிடுவது கொஞ்சம் சாதம், மீன் குழம்பு, ரசம், தயிர். பீட்ரூட், முட்டைகோஸ் பொரியல், கீரை இவை மூன்றும் இடம்பெறும். மாலை இரண்டு பிஸ்கட், டீ. இரவு சிற்றுண்டி பெரும்பாலும் சப்பாத்தி!''

ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!

''டி.வி-யில் தொடர்ந்து பார்க்கும் நிகழ்ச்சி?''

''செய்திகள்!''

''சந்திக்க விரும்பும் நபர்?''

''ஃபிடல் காஸ்ட்ரோ!''

ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!

''சந்திக்கவே கூடாது என நினைக்கும் நபர்?''

''அப்படி 'ஜென்ம விரோதி’ என எவரும் இல்லை!''

''பிடித்த பொன்மொழி?''

''காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!''

''படித்ததில் பிடித்த புத்தகம்?''

''கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி’!''

ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!
ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!

''எதை 'மிஸ்’ செய்கிறீர்கள்?''

''மாணவப் பருவம்!''

''அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை?''

''தலைவர் கலைஞர்!''

''யாரைப் பார்த்தால் பயம்?''

''பேராசை கொண்டோரை!''

''உங்கள் ரோல்மாடல்?''

''தலைவர் கலைஞர்!''

''அப்பா, அம்மாவிடம் பிடித்தது?''

''அப்பாவிடம் உழைப்பு; அம்மாவிடம் குறையாத பாசம்!''

ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!
ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி!

''யாருடைய இழப்பு உங்களை உலுக்கியது?''

''சிட்டிபாபு மற்றும் நண்பர் பொய்யாமொழி!''

''மகன், மகளுக்கு அடிக்கடி சொல்லும் அறிவுரை?''

'''சுயசார்போடு வாழப் பழகிக்கொள்ளுங்கள்’ என்பதுதான்!''

''எமர்ஜென்சி என்றதும் நினைவுக்கு வருவது?''

''சென்னை மத்தியச் சிறை!''

''பிடித்த விளையாட்டு?''

''கிரிக்கெட்!''

''இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் பிடித்தவர்?''

''முன்பு சச்சின்... இப்போது தோனி!''

''சென்னையில் பிடித்த பகுதி... ஏன்?''

''மெரினா கடற்கரை. இதயத்தை வருடும் இதமான காற்று மட்டும் அல்ல... அண்ணா அங்கேதானே உறங்குகிறார்!''

''ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசுக்கு, நீங்கள் தரும் மதிப்பெண்?''

''மதிப்பீடு செய்யும் அளவுக்கு எந்த அம்சமும் இல்லை!''

''முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்க விரும்பும் கேள்வி?''

'' 'எம்.ஜி.ஆரைப் பற்றி உங்களின் உண்மையான மதிப்பீடுதான் என்ன?’ ''