Published:Updated:

சிறையிலிருக்கும் மனைவிக்குக் கஞ்சாப் பொட்டலம் வீசிய கணவன்! அதிர்ந்துபோன போலீஸ்

சிறையிலிருக்கும் மனைவிக்குக் கஞ்சாப் பொட்டலம் வீசிய கணவன்! அதிர்ந்துபோன போலீஸ்
சிறையிலிருக்கும் மனைவிக்குக் கஞ்சாப் பொட்டலம் வீசிய கணவன்! அதிர்ந்துபோன போலீஸ்

சிறையிலிருக்கும் மனைவிக்குக் கஞ்சாப் பொட்டலம் வீசிய கணவன்! அதிர்ந்துபோன போலீஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் தன் மனைவிக்கு, சிறைக்கு வெளியிலிருந்து கஞ்சாப் பொட்டலம் வீசிய கணவனின் செய்கையைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர், காவல் துறையினர். 


விழுப்புரம் மாவட்டம் கோலியனூரைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி திருநாவுக்கரசி. இருவரும், அப்பகுதியில் சாராயம் விற்கும் தொழிலில் கொடிகட்டிப் பறந்து வருகிறார்கள். இதுதொடர்பாக திருநாவுக்கரசி கைதுசெய்யப்பட்டு கடலூர் பெண்கள் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திருநாவுக்கரசியைப் பார்க்க அவரது கணவன் தினகரன் மற்றும் அவரது நண்பர் சுதாகர் ஆகியோர் கடலூர் மத்தியச் சிறைக்கு வந்து, மனுகொடுத்து சிறைக்குள் சென்று திருநாவுக்கரசியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

திருநாவுக்கரசி சாராயம் விற்பதால் எப்போதும் போதையில்தான் திளைத்திருப்பாராம். தற்போது அவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், 'போதை இல்லாமல் எப்படி அவர் கஷ்டப்படுகிறாரோ' என்று வருந்தியிருக்கிறார் தினகரன். அதனால், திருநாவுக்கரசியைப் பார்க்க வரும்போதே கஞ்சாப் பொட்டலத்தோடு வந்திருக்கிறார் அவர். இவர் நினைத்ததுபோலவே, கணவனை கண்டதும் தன்னுடைய கஷ்டத்தைச் சொல்லி அழுது புலம்பியிருக்கிறார் திருநாவுக்கரசி. இதனால் ரொம்பவே கலங்கிப் போனாராம் தினகரன். தான் எடுத்துவந்த கஞ்சாப் பொட்டலத்தை பார்வையாளர்கள் இடத்தில் வைத்து கொடுக்க முடியவில்லை. அதனால், திருநாவுக்கரசியை மதில் சுவர் அருகே வரச் சொல்லிவிட்டு சிறைக்கு வெளியில் வந்திருக்கிறார் தினகரன். வெளியில் வந்த தினகரனும் அவரது நண்பர் சுதாகரும் கல்லில் கஞ்சாப் பொட்டலத்தை கட்டி மதில் சுவர் வழியாக மனைவிக்காக சிறைக்குள் வீசியிருக்கிறார்கள். அதை அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக்காவலர்கள் பார்த்துவிட்டதால், அங்கிருந்து இருவரும் தப்பியோடியிருக்கிறார்கள்.

போலீஸார் அவர்களை துரத்திச் சென்றதில் சுதாகர் மட்டும் போலீஸில் சிக்கியுள்ளார்". இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தப்பியோடிய தினகரனைத் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு