Published:Updated:

அன்னிய முதலீடு: மத்திய அரசுக்கு எதிராக கம்யூ.- பா.ஜ. கைகோர்ப்பு!

Vikatan Correspondent
அன்னிய முதலீடு: மத்திய அரசுக்கு எதிராக கம்யூ.- பா.ஜ. கைகோர்ப்பு!
அன்னிய முதலீடு: மத்திய அரசுக்கு எதிராக கம்யூ.- பா.ஜ. கைகோர்ப்பு!
அன்னிய முதலீடு: மத்திய அரசுக்கு எதிராக கம்யூ.- பா.ஜ. கைகோர்ப்பு!

புதுடெல்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிராக   விவாதத்துடன் கூடிய ஓட்டெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வர   சிபிஐ(எம்) கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில்,இப்பிரச்னையில் பா.ஜனதாவும்  இடதுசாரி கட்சிகளுடன் கைகோர்க்க உள்ளதால் மத்திய அரசுக்கு திடீர் சிக்கல்  ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள  நிலையில்,இந்த கூட்டத்தொடரில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை  அனுமதிக்கும் அரசின் முடிவு குறித்து,இரு அவைகளிலும் விவாதத்துடன் ஓட்டெடுப்பு  நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளது.

ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகிய மம்தாவின் திரிணாமுல்  காங்கிரஸ்,பிஜு ஜனதா தளம்,ஐக்கிய ஜனதா தளம் சமாஜ்வாதி மற்றும் பிரதான  எதிர்கட்சியான பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

##~~##
இதில் சமாஜ்வாதி கட்சியை காங்கிரஸ் தன்பக்கம்  இழுத்துவிட்டபோதிலும்,எதிர்பாராவிதமாக இப்பிரச்னையில் இடதுசாரிகளுடன்  பா.ஜனதாவும் கைகோர்த்துள்ளது.
இது தொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா செய்தி  தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை  அனுமதிப்பது சிறு வியாபாரிகளை பாதிக்கும் என்பதால், அரசின் இந்த முடிவை  நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் இதர அரசியல்  கட்சிகளுடன் இணைந்து பா.ஜ்னதா எதிர்க்கும் என்று தெரிவித்தார்.
அன்னிய முதலீடு பிரச்னையில் இடதுசாரிகளுடன் பா.ஜனதா கை கோர்க்கப்போவதாக  அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கும்,மத்திய அரசுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.