Published:Updated:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் காற்றில் பறக்கும் தடை உத்தரவு!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் காற்றில் பறக்கும் தடை உத்தரவு!
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் காற்றில் பறக்கும் தடை உத்தரவு!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் காற்றில் பறக்கும் தடை உத்தரவு!

உதகையில், பேப்பர் கப் டம்ளர்களுக்கு விதிக்கப்பட்ட  தடை உத்தரவு எம் .ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காகக் காற்றில் பறந்தது.

நீலகிரி மாவட்டத்தை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாத மாவட்டமாக ஆக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துவருகிறது. அதன்படி, பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பேப்பர் கப் ஆகியவற்றுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தடை விதித்துள்ளார். மேலும் சுற்றுலா தலங்களில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வருகின்ற ஜனவரி 15-ம் தேதி முதல் அனைத்துவிதமான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பலமுறை தள்ளிவைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உதகையில் இன்று நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு வந்த அரசு அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பேப்பர் கப் டம்ளரில்தான் காபி வழங்கப்பட்டது. அது எளிதில் மக்கக் கூடிய டம்ளர் என்று அதில் எழுதப்பட்டுள்ளது. விதிமுறை என்றால் அனைவருக்கும் ஒன்றுதானே. தங்களது வசதிக்காக அதை மாற்றிக்கொள்வது எந்த விதத்தில் நியாயம் ஆகும்? அதேபோல, தண்ணீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் பாக்ஸ்கள் என அனைத்துமே பிளாஸ்டிக்தான்.

இந்த உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா? இப்படியே சென்றால், நீலகிரி தடை செய்யப்பட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாத மாவட்டமாக எப்படி மாறும்?

அடுத்த கட்டுரைக்கு