Published:Updated:

`நான் தினகரன் ஆதரவாளன்தான்; நீக்கிப்பாருங்கள்' - ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு சவால்விடும் அ.தி.மு.க எம்.எல்.ஏ

`நான் தினகரன் ஆதரவாளன்தான்; நீக்கிப்பாருங்கள்' - ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு சவால்விடும் அ.தி.மு.க எம்.எல்.ஏ
`நான் தினகரன் ஆதரவாளன்தான்; நீக்கிப்பாருங்கள்' - ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு சவால்விடும் அ.தி.மு.க எம்.எல்.ஏ

`நான் தினகரன் ஆதரவாளன்தான்; நீக்கிப்பாருங்கள்' - ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு சவால்விடும் அ.தி.மு.க எம்.எல்.ஏ

`நான் தினகரன் ஆதரவாளன்தான்; நீக்கிப்பாருங்கள்' - ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு சவால்விடும் அ.தி.மு.க எம்.எல்.ஏ

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் இணைந்து அ.தி.மு.க-வின் புல்லுருவிகள் என்று இனம்கண்டு 100 பேர்களைக் கட்சியின் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி கடந்த 28-ம் தேதியன்று அறிக்கை வெளியிட்டனர். அதில் பெரிதும் அடி வாங்கியிருப்பது புதுக்கோட்டை மாவட்டம்தான். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களின் கோட்டையாகப் புதுக்கோட்டை இருந்த விஷயமே, இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பிறகுதான் அ.தி.மு.க-வினருக்கே தெரிய ஆரம்பித்தது.

நீக்கப்பட்டவர்களில் அறந்தாங்கி தொகுதியின் எம்.எல்.ஏ ரத்தின சபாபதியும் ஒருவர். இவர், புதுக்கோட்டை மாவட்ட அவைத்தலைவராகப் பதவி வகித்தவர். இந்தப் பொறுப்பிலிருந்து மட்டும் அவர் நீக்கப்பட்டுள்ளார். "அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படவில்லை என்பது அவருக்காக ஓ.பி.ஏஸ், ஈ.பி.எஸ் காட்டிய சலுகை" என்கின்றனர் அறந்தாங்கி ரத்தத்தின் ரத்தங்கள். "அதென்ன அப்படியொரு ஸ்பெஷல் சலுகை அவருக்கு மட்டும்?' என்று விசாரித்தோம். "ரத்தின சபாபதிக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி பறிபோகக் காரணமே, அவரின் இளவல் பரணி கார்த்திகேயன்தான்" என்று எடுத்த எடுப்பிலேயே வெடி வைத்தார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

அவர்களே தொடர்ந்து விவரித்தார்கள். "ஆர்.கே.நகரில் தினகரன் ஒரு புதிய வரலாறு படைத்தது வெற்றி பெற்றதுமே அதை முதன்முதலில் பிரமாண்டமாகக் கொண்டாடியது பரணி கார்த்திகேயன்தான். கடந்த 27-ம் தேதி 5,000 பேர்களைப் புதுக்கோட்டையில் திரட்டி, மிகப்பெரிய பேரணியை நடத்தினர். அந்தப் பேரணியில் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் நிறைய பேர் தென்பட்டார்கள்.

'அறந்தாங்கி எம்.எல்.ஏ வந்திருக்கிறாரா' என்று அவர்கள் நைசாக விசாரித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர் வரவில்லை. அப்போதே நினைத்தோம். ஏதோ நடவடிக்கை இருக்கும் என்று. நாங்கள் நினைத்ததுபோலவே மறுநாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் பலரை அடிப்படை உறுப்பினர், பொறுப்புகளிலிருந்து நீக்கி, முதல்வரும் துணை முதல்வரும் உத்தரவுப் போட்டனர். நீக்கப்பட்ட பலரும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள்தான். இதில் கலந்துகொண்டிருந்தால், ரத்தின சபாபதியையும் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி இருப்பார்கள். இருந்தாலும் டி.டி.வி உறவினர் என்பதாலும் தங்களுக்கு எதிராகப் பேரணி மூலம் கூட்டம் சேர்ந்த பரணி கார்த்திகேயனின் அண்ணன் என்பதாலும் ரத்தின சபாபதி வகித்த மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டார்கள். பேரணியில் அவர் கலந்துகொண்டிருந்தால் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கியிருப்பார்கள்" என்று சொல்லிச் சிரித்தார்கள். 

இதுகுறித்து அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதியைத் தொடர்புகொண்டு பேசினோம். "புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவராக அம்மாதான் என்னை நியமித்தார். அவர் கொடுத்த பதவியைப் பறிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் இரண்டு பேருக்குமே அதிகாரம் இல்லை. அப்படி பிடிங்கினவங்க என்னை அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். பன்னீர், எடப்பாடிக்கும் முன்னாடியே அரசியலுக்கு வந்தவன் நான். இவங்க இரண்டுபேரையுமே தமிழ்நாட்டுக்கு அடையாளப்படுத்தியதே தினகரன்தான். அவருக்குத் துரோகம் பண்ணினவங்களுக்கு ஆர்.கே.நகர் மக்கள் நல்லா பாடம் கத்துக்கொடுத்துட்டாங்க. விடுங்க, துரோகிகளைப் பத்தி ஏன் பேசிக்கிட்டு" என்றவர், "நான் தினகரனின் தீவிர ஆதரவாளன். அவங்க என்ன பண்ணனுமோ பண்ணிக்கட்டும்" என்றார் உறுதி தெறிக்கும் குரலில்.

அடுத்த கட்டுரைக்கு