Published:Updated:

ரஜினி மேடையில் ரசிகருக்கு வலியுடன் கிடைத்த இன்ப அதிர்ச்சி!

ரஜினி மேடையில் ரசிகருக்கு வலியுடன் கிடைத்த இன்ப அதிர்ச்சி!
ரஜினி மேடையில் ரசிகருக்கு வலியுடன் கிடைத்த இன்ப அதிர்ச்சி!

ரஜினி மேடையில் ரசிகருக்கு வலியுடன் கிடைத்த இன்ப அதிர்ச்சி!

டிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். மதுரை ரசிகர்களைச் சந்தித்தபோது, திருமங்கலத்தைச் சேர்ந்த அம்பேத்கர் என்ற ரசிகரும் அவரைக் காண  வந்திருந்தார். இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, விபத்தில் சிக்கியதால் அம்பேத்கரின் வலது கை முறிந்திருந்தது. கட்டுப்போட்ட நிலையிலும் சால்வை கொண்டு மூடியவாறு நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க மேடை ஏறினார். 

மேடையில் நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து காதில் ஏதோ அம்பேத்கர் கூறினார். அதற்குள், அவரை நோக்கி வந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரின் தோள்பட்டையைப் பிடித்து இழுத்தனர். இதனால், அந்த ரசிகர் வலியால் துடிக்க, பாதுகாவலர்களைக் கண்டித்த ரஜினி, அந்த ரசிகருக்கு ஆறுதல் கூறினார். கை உடைந்தது எப்படி என்று கேட்டு அறிந்துகொண்ட ரஜினி, உடம்பை பார்த்துக்கொள்ளுமாறும் அவருக்கு அறிவுரை வழங்கினார்.

ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில் வெளியே வந்த அம்பேத்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் நடிகர் ரஜினிகாந்துக்கு கடிதம் தந்தனர். அந்தக் கடிதங்களை அவரிடம் கொடுத்தேன். சந்தோஷமாக வாங்கிக்கொண்டார். நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தது, மனதுக்கு திருப்தி அளிக்கிறது'' என்றார். 

நடிகர் ரஜினிகாந்த் நாளை தன் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கிறார். 

அடுத்த கட்டுரைக்கு