Published:Updated:

`எதிர்க்கட்சித் தலைவரைப்போல செயல்படுகிறார் ஆளுநர் கிரண்பேடி!’ நாராயணசாமி தாக்கு

`எதிர்க்கட்சித் தலைவரைப்போல செயல்படுகிறார் ஆளுநர் கிரண்பேடி!’ நாராயணசாமி தாக்கு
`எதிர்க்கட்சித் தலைவரைப்போல செயல்படுகிறார் ஆளுநர் கிரண்பேடி!’ நாராயணசாமி தாக்கு

`எதிர்க்கட்சித் தலைவரைப்போல செயல்படுகிறார் ஆளுநர் கிரண்பேடி!’ நாராயணசாமி தாக்கு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் அறிக்கைகள் அனைத்தும் மாநில அரசுக்கு முட்டுக்கட்டைப் போடுவதாகவே இருக்கிறது என்று முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று பத்திரிகையாளரைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “இலங்கைக் கடற்படையினரால் 4 மாதங்களுக்கு முன் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியிருக்கிறேன். நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தின் சபாநாயகர் சரியான முடிவுகளை எடுத்து வருகிறார். 3 நியமன எம்.எல்.ஏ-க்கள் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அரசு சார்புச் செயலர் நியமன எம்.எல்.ஏ- க்களுக்குச் சம்பளம் உள்ளிட்ட படிகளை வழங்கும்படி சபாநாயகருக்குக் கடிதம் எழுதியது குறித்து உயர்நீதிமன்றம்தான் பதில் கூற முடியும்.

துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் அறிக்கைகள் அனைத்தும் மாநில அரசுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே இருக்கிறது. விதிமுறைகளின்படி செயல்படுகிறேன் எனக் கூறிக்கொண்டு தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தொடர்ந்து புதுச்சேரி மக்களுக்குத் தெரிவித்து வருகிறார். அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஆளுநர் நேரடியாகத் தலையிடுவதற்கு அதிகாரம் கிடையாது. யூனியன் பிரதேசச் சட்டம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளின் விதிமுறைகளைத் தெளிவுபடுத்தி, இதுவரை 15 முறைக்கு மேல் ஆளுநர் கிரண்பேடிக்குக் கடிதம் எழுதிவிட்டேன். மாநிலத்தின் நிர்வாகியான ஆளுநர், மத்திய அரசையும், உள்துறையையும் மதிக்காமல் யதேச்சதிகாரத்தோடும், தன்னிச்சையாகவும் செயல்படுவதற்குக் கண்டனம் தெரிவிக்கிறேன். அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வருவதோடு, அரசு அதிகாரிகளை அழைத்து போட்டிக் கூட்டங்களையும் ஆளுநர் நடத்தி வருகிறார். அதிகாரிகளுக்குத் தன்னிச்சையாக உத்தரவிடும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மேலும் 2018-ல் அதிகார மாற்றம் நிகழும் என்று ஆளுநர் கிரண்பேடி கூறுகிறார். துணைநிலை ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவரைப் போல செயல்பட்டு வருகிறார்.  ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரிக்கு அதிகமாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு