Published:Updated:

தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்! திருநாவுக்கரசர் காட்டம்

தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்! திருநாவுக்கரசர் காட்டம்
தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்! திருநாவுக்கரசர் காட்டம்

தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்! திருநாவுக்கரசர் காட்டம்

மக்களிடம் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தவர்கள், அடிப்படை சுகாதார வசதிகளைச் செய்வதற்கு பதிலாகத் தங்களைப் பொருளாதாரரீதியாக வளர்த்துக் கொள்வதிலேயே நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஆட்சியை வழிநடத்த வேண்டிய முதலமைச்சர், ஆட்சியைத் தக்க வைப்பதற்கு என்ன உத்திகளைக் கையாளலாம் என்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவழிக்க நேரிடுகிறது. தமது ஆட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்கிற பொறுப்பை செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாள்தோறும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், சாலை மறியல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்தக் கோரிக்கைகளைப் பரிவுடன் கவனித்து துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு அ.இ.அ.தி.மு.க. அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது.

சமீபத்தில் தேசிய சுகாதார இயக்கம் வெளியிட்ட ஆய்வறிக்கை, தமிழகத்தில் சுகாதார நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதை படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள தகவலின்படி பேறுகால இறப்பு விகிதம் தேசிய சராசரியைவிட கடந்த ஐந்தாண்டுகளில் 80 சதவிகிதம் உயர்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இது அதிகரித்திருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது. இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுகிற சென்னை மாநகரத்தில் பேறுகால இறப்பு விகிதம் அதிகரித்திருப்பதுகுறித்து யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. 
பேறுகால இறப்பு விகிதம் என்பது ஒரு லட்சம் பிரசவத்தில் எத்தனை தாய்மார்கள் இறக்கிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது. அதன்படி பேறுகால இறப்பு விகிதம் 2016-ம் ஆண்டில் 51.52 ஆக இருந்தது 2017-ம் ஆண்டில் 62.92 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, சென்னையில் 52 ஆக இருந்தது 63 ஆக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் இதன் விகிதம் தமிழ்நாட்டில் 523 ஆகவும், சென்னையில் 37 ஆகவும் இருக்கிறது. இந்தப் புள்ளி விவரங்கள் தமிழக சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், இந்தப் புள்ளி விவரங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகின்றன. அடிப்படை சுகாதார வசதி என்பது ஏழைகளுக்கும், கிராமப்புற மக்களுக்கும் கிடைப்பது அரிதாகவே உள்ளது.

சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகள்கூட நிறைவேற்றப்படாத நிலையில் கார்ப்பரேட் மருத்துவ சேவைகள் அ.இ.அ.தி.மு.க. அரசின் உதவியுடன் அசூர வேகத்தில் உயர்ந்துவருகின்றன. இத்தகைய போக்கை தடுத்து நிறுத்துவதுகுறித்து அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் வளமான தமிழகத்தைக் காண்பதாக கூறுவது மக்களை ஏமாற்றுகிற மோசடித்தனமான செயலாகவே கருத வேண்டும். ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தவர்கள் அடிப்படை சுகாதார வசதிகளைச் செய்வதற்குப் பதிலாக தங்களை பொருளாதார ரீதியாக வளர்த்துக் கொள்வதிலேயே நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, தமிழக, அ.இ.அ.தி.மு.க. அரசு தேசிய சுகாதார இயக்கம் ஆய்வுசெய்து வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை ஆய்வுசெய்து போர்க்கால அடிப்படையில் சுகாதாரத் துறையில் அதிரடி  மாற்றங்களைச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

அடுத்த கட்டுரைக்கு