Published:Updated:

பங்களா வீடு... ஆர்.கே.நகரில் குடியேறும் தினகரன் 

பங்களா வீடு... ஆர்.கே.நகரில் குடியேறும் தினகரன் 
பங்களா வீடு... ஆர்.கே.நகரில் குடியேறும் தினகரன் 

பங்களா வீடு... ஆர்.கே.நகரில் குடியேறும் தினகரன் 

பங்களா வீடு... ஆர்.கே.நகரில் குடியேறும் தினகரன் 

மக்களின் குறைகளைக் கேட்க வசதியாக ஆர்.கே.நகர் தொகுதியிலேயே குடியேற தினகரன் திட்டமிட்டுள்ளார். இதற்காகப் பங்களா டைப் கொண்ட வீட்டை வாடகைக்குப் பேசி முடித்துள்ளனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தினகரன், எம்.எல்.ஏ-வாகவும் பதவி ஏற்றுக்கொண்டார். வெற்றி பெற்றவுடன் சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்தித்து வாழ்த்துபெற்றார். அடுத்து, வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளார். ஆர்.கே.நகரை தமிழகத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக மாற்றவும் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்க வசதியாகவும் ஆர்.கே.நகரில் குடியிருக்க தினகரன் முடிவு செய்துள்ளார். இதற்காக வாடகைக்கு வீடு பார்க்கும் வேலையை வெற்றிவேலிடம் தெரிவித்துள்ளார். அவரும் தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனை அருகில் உள்ள பங்களா டைப் வாடகை வீட்டை பேசி முடித்துள்ளார். அந்த வீட்டுக்கு விரைவில் குடியேற தினகரன் திட்டமிட்டுள்ளார். இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பை தினகரன் தெரிவிக்கவில்லை. 

அடுத்த கட்டுரைக்கு