Published:Updated:

முதல்வர் பழனிசாமி சொன்ன ஆமை- எலி குட்டிக்கதை

முதல்வர் பழனிசாமி சொன்ன ஆமை- எலி குட்டிக்கதை
முதல்வர் பழனிசாமி சொன்ன ஆமை- எலி குட்டிக்கதை

முதல்வர் பழனிசாமி சொன்ன ஆமை- எலி குட்டிக்கதை

உதகை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். உதகைப் பேருந்து நிலையத்தை நவீனமாக்க கூட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.5 கோடி செலவில் பழங்குடியின மக்களின் வீடுகள் புனரமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

பின்னர் வழக்கம்போல அவர் குட்டிக் கதையைச் சொன்னார். "ஒரு ஊரில் ஆமையும் எலியும் நண்பர்களாக இருந்தன. அப்போது எலிக்கு, நீச்சல் பழகித் தருவதற்காக, தனது உடலில் கயிறு கட்டியது. அது ஏன் என்று எலி கேட்டதற்கு, பாதுகாப்புக்காகத்தான் என, ஆமை கூறியது. அவர்கள் இருவரும் இணைந்திருப்பதை, ஒரு பருந்து நோட்டமிடுகிறது. இதை அறிந்துகொண்ட ஆமை, தண்ணீருக்குள் தப்பிச் செல்கிறது. எலி தண்ணீரில் தத்தளித்து இறந்துவிடுகிறது. இறந்துபோன எலியை, பருந்து தூக்கிச் செல்கிறது. முன்பு மாட்டியிருந்த கயிற்றால், ஆமையும் பருந்திடம் சிக்குகிறது. கூட்டு சேர்ந்த எலியும், ஆமையும் பருந்துக்கு இறையாகின. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இதுதான் உதாரணம்.

தினகரனும், ஸ்டாலினும் எங்களை வீழ்த்துவதற்காக ஆர்.கே.நகரில் கூட்டாக செயல்பட்டனர். ஆனால், எங்களை வீழ்த்துவதற்காக 10 கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட தி.மு.க-வால் டெபாசிட் கூட பெறமுடியவில்லை. முன்பு திருமங்கலம் பார்முலா இருந்தது. தற்போது ஆர்.கே.நகர் பார்முலாவாக மாறியுள்ளது. ஹவாலா முறை மூலம் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். எங்களைத் துரோகிகள் என்று அவர் சொல்கிறார். நாங்கள் எல்லாம் உழைத்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். உழைக்காமல், கொள்ளைப் புறமாக வந்தவர் தினகரன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு