Published:Updated:

`ரஜினி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி...' மதுரையில் அதிர்ந்த அன்புமணி

`ரஜினி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி...' மதுரையில் அதிர்ந்த அன்புமணி
`ரஜினி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி...' மதுரையில் அதிர்ந்த அன்புமணி

`ரஜினி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி...' மதுரையில் அதிர்ந்த அன்புமணி

``யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி வந்தாலும் வராவிட்டாலும் சரி, அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் இல்லை" என்று அன்புமணி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் இன்று நடைபெற்ற பா.ம.க பாெதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவர் அன்புமணி பேசும்போது, ``1989-ல் கட்சித் தாெடங்கி தாெடர்ந்து மக்களுக்கான பாேராட்டங்களை முன்னெடுத்த முதன்மையான கட்சி பா.ம.க. மக்களின் பிரச்னைகளை உணர்வுபூர்வமாக அணுகி வருபவர்  ராமதாஸ். ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற வேண்டும் எனப் பிரதமர் வீட்டு முன்பு அமர்ந்து பாேராட்டம் நடத்திய வரலாறு பா.ம.க-வுக்கு உண்டு. காமராஜர் காலத்தோடு சரி, நீர் மேலாண்மை பற்றி பேச திராவிட கட்சிகளுக்குத் தகுதி இல்லை. காவிரி பிரச்னை, அத்திக்கடவு - அவினாசித் திட்டம் என அனைத்துக்கும் பாேராட்டங்களை முன்னெடுத்தது பா.ம.க.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பாெறுத்தமட்டில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மோசமானது. கையாலாகாதத் தேர்தல் ஆணையத்துக்குப் பூட்டு பாேடலாம் என்ற ஆதங்கம் இருந்தது. அதனால்தான் தேர்தல் சீர்திருத்தம் வேண்டும் எனத் தாெடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஊழல் மயமான ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆட்சி பற்றி ஆளுநரிடம் அறிக்கை அளித்து இருக்கிறேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இவர்களின் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் வெகுண்டெழ வேண்டும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. அவர் மத்திய அரசிடம் பேசி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயல வேண்டும். ஒகி புயல் சம்பந்தமாக ஆய்வு நடத்த வந்த மத்தியக்குழு, இதுவரை ஆய்வு பற்றிய எந்த விபரங்களையும் கூறாமல் உள்ளது" என்றார்.

ராமதாஸ் பேசுகையில், "தேர்தல் சீர்திருத்தம் காெண்டு வரப்படாமல் மாற்றத்துக்கு சாத்தியமில்லை. அதை வலியுறுத்தி அடுத்த கூட்டத்தாெடரில் பாராளுமன்றத்தை முற்றுகையிட வேண்டும்" என்று நீண்ட உரையாற்றினார்.

அடுத்த கட்டுரைக்கு