Published:Updated:

அரசியலுக்கு வருவாரா ரஜினி? ரசிகர்கள் மத்தியில் நாளை அறிவிப்பு

அரசியலுக்கு வருவாரா ரஜினி? ரசிகர்கள் மத்தியில் நாளை அறிவிப்பு
அரசியலுக்கு வருவாரா ரஜினி? ரசிகர்கள் மத்தியில் நாளை அறிவிப்பு

அரசியலுக்கு வருவாரா ரஜினி? ரசிகர்கள் மத்தியில் நாளை அறிவிப்பு

அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்பது பற்றி நாளை ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்த்திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் ரஜினிகாந்த். ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். 1990-களில் இருந்து தன் படங்களில் அரசியல் கருத்துகளைக் கூறிவந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆகவே, அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. 1996 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு  ஆதரவு வாய்ஸ் கொடுத்தார் ரஜினி. அதன்பிறகு வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியை ஆதரித்தார். அதன்பிறகு அரசியலில் ரஜினி தீவிரம் காட்டவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது ரஜினிகாந்த் அரசியல் கருத்துகளை உதிர்த்தார். இது அவருடைய ரசிகர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. ரஜினி கடந்த 26-ம் தேதியில் இருந்து சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட வாரியாக ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதுடன் அவர்களுடன் உரையாடி வருகிறார். 'டிசம்பர் 31-ம் தேதி எனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்' என்று ரஜினி கூறியிருந்தார்.

நாளை டிசம்பர் 31-ம் தேதி. நாளை ரஜினி வழக்கம்போல் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்திக்கிறார். அதன்பிறகு அவர் தன் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி 'நல்ல' முடிவைச் சொல்ல வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை எதிர்நோக்கி ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு