Published:Updated:

தமிழகத்திற்கு 4.8 டிஎம்சி காவிரி நீர் திறக்க உத்தரவு!

தமிழகத்திற்கு 4.8 டிஎம்சி காவிரி நீர் திறக்க உத்தரவு!
தமிழகத்திற்கு 4.8 டிஎம்சி காவிரி நீர் திறக்க உத்தரவு!
தமிழகத்திற்கு 4.8 டிஎம்சி காவிரி நீர் திறக்க உத்தரவு!

புதுடெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நாள்தோறும் 4.8 டிஎம்சி தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.

மத்திய நீர் வளத்துறை செயலாளரும்,காவிரி கண்காணிப்புக் குழு தலைவருமான துரு விஜய் சிங் தலைமையில் காவிரி கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில், தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் தேபேந்திர நாத் சாரங்கி, பொதுப்பணித் துறை செயலாளர் சாய்குமார் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்றனர்.
இதேபோல், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் சார்பில் அந்தந்த மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது, இன்று முதல் இம்மாத இறுதி வரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 4.8 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.அது தவிர, சம்பா பயிர்களைக் காப்பாற்ற 52.55 டி.எம்.சி தண்ணீர் வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்தும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

##~~##
ஆனால், பருவமழை தொடங்கும் காலம் தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படாததால் இப்பிரச்னையில் எந்த ஒரு உத்தரவையும் காவிரி கண்காணிப்பு பிறப்பிக்கவில்லை.
காவிரி கண்காணிப்புக் குழுவின் முந்தைய கூட்டம் கடந்த மாதம் 31ம் தேதி நடந்தது. அப்போது, நவம்பர் 1 முதல் 15ம் தேதி வரை 3.94 டிஎம்சி நீரும், கடந்த மாதம் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை வழங்க வேண்டிய பற்றாக்குறை நீரான 2.15 டிஎம்சி நீரையும் சேர்த்து 6.09 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டது.ஆனால் அதனை கர்நாடகம் செயல்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.