Published:Updated:

மகாராஷ்டிரா சாதிக் கலவரம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா?

மகாராஷ்டிரா சாதிக் கலவரம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா?
மகாராஷ்டிரா சாதிக் கலவரம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா?

மகாராஷ்டிரா சாதிக் கலவரம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா?

காராஷ்டிராவில் நடந்த கலவரம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை அம்பேத்கருடைய பேரன் சுஜத் வெளியிட்டுள்ளார்.  

மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு அருகே உள்ள கோரேகாவ் பீமா பகுதியில் ஆங்கில - மகாராஷ்டிரா போரின் 200-வது ஆண்டு விழா  நடைபெற்றது. இந்த விழாவின்போது இருதரப்புக்கும் இடையே நடந்த மோதல், கலவரமாக வெடித்தது.

200 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ்  படைக்கும் - மகாராஷ்டிர படைக்கும் இடையே  போர் நடைபெற்றது. இந்தப் போரில், பிரிட்டிஷ் படைக்கு ஆதரவாக மகர் இன தலித் மக்கள் இருந்தனர். அதில் பிரிட்டிஷ் படை வெற்றிபெற்றது ஆண்டுதோறும் புத்தாண்டுத் தினத்தில் மகர் இன மக்கள் இந்த வெற்றியை விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு விழா தொடங்கியபோது, அங்கு வந்த மற்றொரு பிரிவினர் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுத்துள்ளனர். இதன் காரணமாக, இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் கலவரமாக வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அங்கு பலத்த பாதுகாப்பிருந்தும், மகர் இன தலித் மக்கள் புனே மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் சாலை மறியல்  மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இந்தக் கலவரத்தால் 187-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாகச் சாதி மோதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான பகுஜன் மகாசங்க கட்சி மற்றும் 300-க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகள் (3.1.2018) மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், இந்த முழு அடைப்பைத் தொடர்ந்து சில இடங்களில் கடைகள்  அடைக்கப்பட்டிருந்தாலும் ரயில் சேவை மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், மாலை 4 மணிக்கு மேல் பிரகாஷ் அம்பேத்கர் முழு அடைப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். முழு அடைப்பு வாபஸ் பெற்றதையடுத்து, மும்பை மற்றும் புனேவில் இயல்பு வாழ்கை திரும்பியது. மேலும், இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் மகாராஷ்டிரா எம்.பி-க்கள் விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரினர். ஆனால், மாநிலங்களவைத் துணைத் தலைவர் குரியன் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால், சிறிது நேரம் மாநிலங்களவையில் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே சாதிக் கலவரத்தை மகாராஷ்டிராவில் உள்ள இந்துத்வா அமைப்புகளே தூண்டிவிட்டதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

இந்த நிலையில், பிரகாஷ் அம்பேத்கரின் மகனான சுஜித் , ''ஒருவாரத்துக்கு முன்பே கலவரத்தை ஏற்படுத்த சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளன'' என்று தனியார் செய்தி நிறுவனத்துக்குக் கூறியுள்ளார். மேலும் சுஜித்தின் நண்பரும், சமூக ஆர்வலருமான மல்ஹர் தக்லே இவ்வாறு தமக்கு ஒரு வாட்ஸ்அப் தகவலை தமக்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை 'யூத் பார் டெமாக்கரசி' (youth for democracy) என்ற அமைப்பிடமிருந்து மல்ஹர்தக்லே பெற்றதாகச் சுஜித் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விழாவைச் சீர்குலைக்க வன்முறையைத் தூண்டிவிடுவது என அங்குள்ள சில அமைப்புகள் திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'பிரம்மன் மஹாசங்க்' என்ற அமைப்பு, நிகழ்வை நடத்தவிடாமல் போராட்டம் நடத்துவோம் என்று தகவல் சொன்னதாகவும், அதனைத் தொடர்ந்தே இந்தக் கலவரம் நடந்ததாகவும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், ''கலவரத்தில் ஈடுபட்டதாக எங்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்கள் சிலரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். நாங்கள் கோழைகள் அல்ல... களப் போராளிகள். இதுபோன்ற வன்முறையில் ஈடுபட  மாட்டோம்'' என்று தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் மகாராஷ்டிரா காவல் துறையினர், 16 -க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், மகாராஷ்டிரா கலவரம் குறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் மற்றும் குஜராத் மாநிலச் சட்டமன்ற உறுப்பினரும் தலித் அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மெவானி இருவரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு