சினிமா
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

'கிராமங்களில் வசித்தால், ஒரு நாளைக்கு

தலையங்கம்

26; நகரங்களில் வசித்தால்

தலையங்கம்

32-க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்' என்று வாய் கூசாமல் சொல்லி, வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறது மத்திய அரசாங்கம். மக்களோடு மக்களாக இருப்பதற்குப் பதிலாக, மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிற அரசு இது என்பது மறுபடியும் நிரூபணம் ஆகியிருக்கிறது. அதனால்தான், தன்னுடைய அறிவிப்பை அவசர அவசரமாகத் திரும்பி வாங்கும் அவமானம் அரசுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

'பணவீக்கம் கட்டுக்கு அடங்காமல் இருக்கிறது... விலையேற்றம் அத்தனை பேரையும் வாட்டுகிறது' என்பதைத் தட்ட முடியாமல் ஒப்புக்கொண்டாலும், வறுமைக் கோட்டுக்குக் கீழே உழல்வோரின் எண்ணிக்கையைத் தந்திரமாகத் தங்கள் அரியணைக்குக் கீழே போட்டு அமுக்கப் பார்க்கிறார்கள்.

வீடு-வாசல் ஏதும் இல்லாமல் வானமே கூரையாக வாழ்கின்ற பிச்சைக்காரர்கள்கூட ஒரு நாளைக்குக் குறைந்தது 100 ரூபாய் சம்பாதித்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்கிறபோது, கிராமத்தில் 26 ரூபாயும் நகரத்தில் 32 ரூபாயும் இருந்து விட்டாலே வறுமையின் நிழல் படியாமல் ஒரு தினத்தை நகர்த்திவிட முடியும் என்று எந்த மனசாட்சியின் அடிப்படையில் சொல்கிறது இந்த அரசாங்கம்?

'மானத்தை மறைக்க உடை இல்லை; நோய் வந்து படுத்தால் மருந்து இல்லை; குழந்தைகளுக்குக் கல்வி இல்லை; தலைக்கு எண்ணெய் இல்லை; தலைக்கு மேல் கூரையும் இல்லை... ஆனால், நீங்கள் யாருமே ஏழைகள் இல்லை' என்று சொல்லும் இந்த ஆட்சியை மக்கள் ஆட்சி என்று எப்படிச் சொல்வது?

இந்த அரசாங்கத்துக்கு, நெஞ்சிலே ஈரம் இல்லை; ஏழை படும் பாடு புரிய வில்லை; வறுமையைப் போக்கும் திறனும் இல்லை; போக்குவதற்கு மனமும் இல்லை என்பதைத்தான் காட்டியிருக்கிறது அவர்கள் கிழித்திருக்கும் இந்த வறுமைக் கோடு. பதவி சுகத்தின் மிதப்போடு அடிவயிற்றுப் பசியின் சூடு என்னவென்றே தெரியாத இவர்களுக்கு, எப்படித் தெரியும் வறுமையின் கோடு!