Published:Updated:

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

 நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
 நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு தொடர்பான விவகாரத்தால் அவையில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி,. டிசம்பர் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது..இதில், 20 அமர்வுகள் நடைபெறும்.25 மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. லோக்பால்–லோக் ஆயுக்தா மசோதா, பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதா, ஊழல் பற்றி தகவல் கொடுப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் மசோதா, இன்சூரன்சு துறையில் அன்னிய முதலீட்டை உயர்த்தும் மசோதா, வங்கிகள் சட்ட திருத்த மசோதா, கம்பெனி மசோதா, ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணைய மசோதா ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.மேலும், 10 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.நடப்பு நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கை மீது ஓட்டெடுப்பும் நடத்தப்படுகிறது.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

அதே சமயத்தில், இந்த கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அந்த அளவுக்கு மத்திய அரசை எதிர்க்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி தயாராகி வருகின்றன.மத்திய மந்திரிசபையில் இருந்து விலகி உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதற்காக பா.ஜனதா, இடதுசாரி கட்சிகள் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரி உள்ளது.


##~~##
ஆனால், எந்த கட்சியும் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை.போதிய ஆதரவு இருந்தால் மட்டுமே ஆதரவு தெரிவிக்கலாம் என்று பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளன.இருப்பினும், திட்டமிட்டபடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயன்றால், அது நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டெடுப்பு
அதே சமயத்தில், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அந்த விவகாரம் குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.ஆனால், விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருந்தபோதிலும், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு தயாராக இல்லை. இதனால், நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி–எதிர்க்கட்சி கூட்டணி இடையே கடும் வாக்குவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இடதுசாரி கட்சிகளும், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த விரும்புகின்றன. இதனால் இவ்விவகாரத்தால் பாராளுமன்றத்தில் அனல் பறக்கும்என்று தெரிகிறது.மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப் தூக்கில் போடப்பட்ட நிலையில் இக்கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த விவகாரமும், நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.