Published:Updated:

கருணாநிதியை சமாதானப்படுத்த கபில் சிபிலை அனுப்புகிறது காங்கிரஸ்?

கருணாநிதியை சமாதானப்படுத்த கபில் சிபிலை அனுப்புகிறது காங்கிரஸ்?
கருணாநிதியை சமாதானப்படுத்த கபில் சிபிலை அனுப்புகிறது காங்கிரஸ்?
கருணாநிதியை சமாதானப்படுத்த கபில் சிபிலை அனுப்புகிறது காங்கிரஸ்?

புதுடெல்லி/சென்னை: கருணாநிதியை சமாதானப்படுத்த கபில் சிபிலை காங்கிரஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், 2ஜி அறிக்கையில் ஜோஷி தலையிட்டதாக கிளம்பியுள்ள குற்றச்சாட்டை வைத்து தன் மீதான களங்கத்தை கழுவ திமுக வியூகம் வகுத்துள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன,

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக, ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கிவருகின்றன.இதனை தடுக்கும் வகையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்திய மத்திய அரசு ஒப்புக் கொள்ளக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இதனால் கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி உள்ளது.  காங்கிரஸ். தற்போது வாக்கெடுப்பில்லா விவாதத்துக்கு தயார் என்று அறிவித்து இறங்கி வந்திருக்கும் மத்திய அரசு,அனேகமாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் எனும் அக்னி பரீட்சைக்கு தயாராவதாகவே கூறப்படுகிறது.

இதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளையும் வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளையும் சமாதானப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு விவகாரத்தில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

இதனால் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேச வருகிற 25ம் தேதியன்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

அண்மையில்தான் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருணாநிதியை சந்தித்துப் பேசி இருந்தார்.இந்நிலையில் மீண்டும் மத்திய அமைச்சர் ஒருவரை காங்கிரஸ் மேலிடம் கருணாநிதியை சந்திக்க அனுப்ப உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

##~~##
மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சிஏஜி தந்த அறிக்கையில்,பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலையிட்டதாக சிஏஜி அலுவலக டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதை வைத்துக்கொண்டு  2ஜி விவகாரத்தை பா.ஜனதா பக்கம் திருப்பிவிட காங்கிரச் ஒருபுறம் வரிந்துகொண்டு இருக்கும் நிலையில்,திமுகவும் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி,2ஜி விவகாரத்தில் தங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்டது என்பதுபோன்ற் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் ஆர்.பி.சிங் கூறியுள்ள கருத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தவும் திமுக. முடிவு செய்து உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.