Published:Updated:

வீரபாண்டி ஆறுமுகம் உடல் சொந்த ஊரில் அடக்கம்!

வீரபாண்டி ஆறுமுகம் உடல் சொந்த ஊரில் அடக்கம்!
வீரபாண்டி ஆறுமுகம் உடல் சொந்த ஊரில் அடக்கம்!
வீரபாண்டி ஆறுமுகம் உடல் சொந்த ஊரில் அடக்கம்!

சேலம்: சென்னையில் காலமான திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் சனிக்கிழமையன்று மாலை, சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பூலாவரியில் அடக்கம் செய்யப்பட்டது.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும்,அக்கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர்  மற்றும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் நேற்று காலை  மரணம் அடைந்தார். 75 வயதான அவர் சிறைக்கு சென்று வந்தது முதல்  உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு  வந்தார். ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை  செய்து கொண்ட அவருக்கு மூச்சுத்திணறலும், நுரையீரலில் கோளாறும் இருந்தது.

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  அவர், நேற்று காலை 11 மணிக்கு உயிரிழந்தார்.அவர் மறைந்த செய்தி அறிந்ததும்  திமுக தலைவர் கருணாநிதி,  பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், இந்திய  யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் மற்றும் ஏராளமானோர்  மருத்துவமனைக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

##~~##
அதன் பிறகு அவரது உடல் ஆம்புலன்ஸ் வேன் மூலம் நேற்று மாலை 6-55 மணிக்கு  சேலம் பூலாவாரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு  வரப்பட்டது.அங்கு அவரது  உடலுக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி அஞ்சலி செலுத்தினார்.மேலும் திமுக  பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக,மதிமுக,தேமுதிக,பாமக, கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அவர் மறைவையொட்டி நேற்று முதல் திமுக கொடிகள் அரைக்கம்பத்தில்  பறக்கவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற்றது. அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக  எடுத்துச்செல்லப்பட்டு,   பூலாவாரியில் உள்ள அவரது தோட்டத்தில் அவரது மகன்  நெடுஞ்செழியன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில்,  அடக்கம்  செய்யப்பட்டது.

இந்த இறுதி ஊர்வலத்தில் தி.மு.க.பொருளாளர் மு.க.  ஸ்டாலின் மற்றும். தி.மு.க. முன்னணி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். உடல் அடக்கம் முடிந்ததும் அனுதாப கூட்டம் நடைபெற்றது.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் சேலம்  நகரிலும், ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி,  இடைப்பாடி, கொங்கணாபுரம்,  மல்லலூர், மேட்டூர், ஓமலூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் இன்று 2-வது நாளாகவும்  கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.  சேலத்தில் நேற்று மதியம் முதல் தனியார் பஸ்கள் ஓடவில்லை.அரசு பஸ்கள் மட்டும்  ஓடுகின்றன. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஜங்சன் ரெயில் நிலையம்  உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.