Published:Updated:

அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி பெயர் ‘ஆம் ஆத்மி'!

Vikatan Correspondent
அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி பெயர் ‘ஆம் ஆத்மி'!
அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி பெயர் ‘ஆம் ஆத்மி'!
அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி பெயர் ‘ஆம் ஆத்மி'!

புதுடெல்லி்: புதிதாக அரசியல் கட்சி துவங்கிய சமூக ஆர்வலர் அரவிந்த்  கெஜ்ரிவால்,இன்று தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

அன்னா ஹசாரேவுடன் இணைந்து செயல்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், பின்னர்  அவரிடமிருந்து பிரிந்தார்.அரசியல் கட்சி தொடங்குவதை ஹசாரே விரும்பாத  நிலையில்,கெஜ்ரிவால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதிய கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் மற்றும் கட்சியின் 300 க்கும்  மேற்பட்ட தொண்டர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றையும இன்று காலை  நடத்தினார். இக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் கோட்பாடுகள் குறித்து  விவாதிக்கப்பட்டது.

##~~##
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்,‘ஆம் ஆத்மி'(  சாமான்ய மனிதன் )  என்று தனது கட்சியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். 

தமது கட்சி சாமான்ய மக்களுக்கானது என்றும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்த அவர், ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி போராடும் என்றும் கூறினார்.

இந்நிலையில் கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கான 30 உறுப்பினர்களையும் கெஜ்ரிவால்   தேர்வு செய்ய உள்ளார். இந்த உறுப்பினர்கள் கட்சியின் முக்கிய முடிவுகளை  எடுக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பார்கள் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.