Published:Updated:

கனிமொழி வீட்டில் கருணாநிதி..!

கனிமொழி வீட்டில் கருணாநிதி..!

கனிமொழி வீட்டில் கருணாநிதி..!

கனிமொழி வீட்டில் கருணாநிதி..!

கனிமொழி வீட்டில் கருணாநிதி..!

Published:Updated:
கனிமொழி வீட்டில் கருணாநிதி..!

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் ஓய்வில் இருக்கிறார். மருத்துவர்களின் ஆலோசனையின் படி, கோபாலபுரம் வீட்டிலேயே தங்கியுள்ளார். முன்பெல்லாம், காலை உணவை சி.ஐ.டி காலணியில் முடித்து விட்டு கோபாலபுரம் அல்லது அறிவாலயம் வரும் அவர், அங்கேயே தொண்டர்களைப் பார்ப்பார். நிர்வாகிகளை சந்தித்து பேசுவார்.

மதிய உணவை கோபாலபுரம் இல்லத்தில் முடித்துவிட்டு, மாலை சி.ஐ.டி காலணி வீட்டுக்கு வருவார். இந்த தினசரி பழக்கம் முடங்கி, கடந்த 15 மாதங்களாக கோபாலபுரம் வீட்டில்தான் கருணாநிதி இருக்கிறார். முரசொலி பவள விழாவை முன்னிட்டு ஒரு தடவை முரசொலி அலுவலம் சென்றார். அதன் பிறகு அறிவாலயம் வந்தார். கூட்டணி கட்சித் தலைவர்களைக் கோபாலபுரம் இல்லத்தில்தான் பார்த்தார். சென்னை வந்த பிரதமர் மோடியும் கோபாலபுரம் இல்லம் வந்து கருணாநிதியைச் சந்தித்தார். உடல் நலம் விசாரித்தார்.

இந்நிலையில், கோபாலபுரம் வீட்டில் இருக்கும் கருணாநிதி, பொங்கல் அன்று தொண்டர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வழக்கமாக பொங்கல் அன்று கருணாநிதி வீடு களை கட்டும். இந்த ஆண்டும், சி.ஐ.டி காலணி வீட்டில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பொங்கல் அன்று கோபாலபுரம் வீட்டில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். தனித்தனியாக தொண்டர்களை பார்க்க மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தடை போட்டுவிட்டனர். இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு சென்னை சி.ஐ.டி காலணி வீட்டிற்கு ஜனவரி 15-ம் தேதி இரவு 9 மணிக்கு சென்றார் கருணாநிதி. வீட்டுக்கு வந்த கருணாநிதியை அவரது மகள் கனிமொழி வரவேற்றார். ராஜாத்தி அம்மாள், அரவிந்தன் ஆகியோர் கருணாநிதியை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். ''வீட்டுக்கு அப்பா வந்தது மகிழ்சி அளிக்கிறது' என்றார் கனிமொழி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!